- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முன் நெற்றிப் பகுதியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறதா? இந்த முறைகளைப் பின்பற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்

மனிதர்களுக்கு வயதாகும்போது முன் நெற்றயில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படத் தொடங்கும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சனை இளம் வயதினருக்கும் அதிகளவில் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. மன அழுத்தம், உடலில் பித்தம் அதிகமாக இருத்தல், தலைமுடியை சரியாக பராமரிக்காமல் விடுதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை எழுகிறது. நம் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கிய அங்கமாக விளங்கும் முடியானது உதிரத் தொடங்கும்போதே, பலருக்கும் மனமும் சேர்ந்தே உடைந்து போகிறது.

பொதுவாக தலையின் மற்ற பகுதிகளில் முடி உதிர்வது குறைவு என்றாலும் முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்லும் பிரச்சனை பலருக்கும் எழுவதுண்டு. இதற்கு உடனடி தீர்வாக நவீன மருத்துவம் பல்வேறு மருந்துகளை பரிந்துரை செய்கிறது. ஆனால் அதனால் பக்க விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது. இந்த பதிவில் இயற்கையான முறையிலேயே முன் நெற்றியில் முடி உதிர்தல் பிரச்சனைக்கான தீர்வை நாம் கணலாம்.

- Advertisement -

கரிவேப்பிலை மற்றும் சிறிய வெங்காயம்:
உடலில் இருக்கும் பித்தத்தை போக்குவதில் கரிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் கொழுந்து இலைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், பித்தத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சியையும் தூண்டுகிறது. கரிவேப்பிலையை உட்கொள்வதற்கு சிரமப்படுபவர்கள், அதனை அரைத்து சாறாக பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு சிறிய வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அடித்து அதன் சாறையும் எடுத்து கரிவேப்பிலை சாறுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை முடி உதிர்ந்த இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் இழந்த முடியானது மீண்டும் வளரத் தொடங்கும். இந்த முறையில் சிறிய வெங்காயத்தை பயன்படுத்துவதே சிறந்த பலனைக் கொடுக்கும். அதேபோல மென்மையான முறையில் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும் அழுத்தி செய்யக்கூடாது.

ஆலிவ் ஆயில் மற்றும் இலவங்கப் பட்டை:
இலவங்கப் பட்டை மற்றும் ஆலிவ் ஆயிலில் முடி வளர உதவும் ஆண்டி ஆக்சிடன்டுகள் மற்றும் விட்டமின் ஈ சத்துகள் அதிக அளவில் காணப்படுகின்றது. இலவங்கப் பட்டையை பொடி செய்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து முன் நெற்றியில் தடவி அரை மணி நேரம் மசாஜ் செய்த பின்னர் தலையை சீயக்காய் தூள் போட்டு அலசி வர, இழந்த முடி மீண்டும் வளர்வதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். இலவங்கப் பட்டை காரத் தன்மை உடையதால் அதனை தேவையான அளவு மட்டும் உபயோகிப்பது நல்லது.

- Advertisement -

கருஞ்சீரகம்:
தலைப்பகுதிக்கு சீரான ரத்த ஓட்டம் செல்லாமல் இருப்பதும் முன் நெற்றயில் முடி உதிர்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த பிரச்சனையை நமது வீட்டு சமயலறையில் இருக்கும் கருஞ்சீரகமே சரிசெய்து விடும். அதனை கொண்டு சுலபமாக ஒரு ஹேர் பேக்கை தயாரித்து விடலாம். மூன்று ஸ்பூன் விளக்கெண்ணையுடன் சிறிதளவு கருஞ்சீரகத்தை சேர்த்து மிதமாக சூடுபடுத்தவும். சூடேற்றிய இந்த எண்ணெய் கலவையை இரண்டு மணி நேரங்கள் அப்படியே வைத்து விடுங்கள். எண்ணையில் கருஞ்சீரகம் நன்றாக ஊறிய பின்னர், இதனுடன் கற்றாழை ஜெல்லை சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டால், கருஞ்சீரக ஹேர் பேக் தயார். இந்த ஹேர் பேக்கை முடி உதிர்ந்த இடத்தில் தடவிய பின்னர், முப்பது நிமிடங்கள் கழித்து அலசி விடுங்கள். இந்த செயல்முறையை வாரம் ஒருமுறை செய்து வர நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

மேலே கூறிய இயற்கையான முறையில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆண்களும் பெண்களும் தங்கள் முடி உதிவு பிரச்னையை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

- Advertisement -