- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

பத்து நிமிடத்தில் பளிச்சென்ற முகம் கிடைக்க.

- Advertisement -

நம்முடைய முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். எந்த நிறமாக இருந்தாலும் முகம் பளிச்சென்று இருந்தாலே அது ஒரு வித பொலிவை தந்துவிடும். அப்படி முகம் பளிச்சென்று இருப்பதற்கு பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. இருப்பினும் மிகவும் குறைந்த நேரத்தில் முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு நாம் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் ஒன்று இருந்தாலே போதும். வாழைப்பழத்தை வைத்து எப்படி ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சென்று மாறும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப் பொருட்கள் நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய சமையலறையை தான் மருத்துவ மனையாகவும், அழகு நிலையமாகவும் அன்றைய காலத்து பெண்கள் கருதினார்கள். அதை மறந்ததால் தான் இன்றைய காலத்தில் மருத்துவமனைகளும் சரி அழகு நிலையங்களும் சரி அதிகமாகி கொண்டே போகிறோம். அந்த வகையில் நாம் தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் எடுத்துக் கொள்ளும் வாழைப்பழத்தை வைத்து ஃபேஸ் பேக் செய்யும் முறையை தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இதற்கு நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் இருந்து அரை பழம் இருந்தால் போதும். அதை தனியாக எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து அதையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக இதனுடன் கெட்டியாக இருக்கக்கூடிய தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஃபேஸ் பேக் தயாராகி விட்டது. இதை நம்முடைய முகத்தை சுத்தம் செய்த பிறகு இந்த ஃபேஸ் பேக்கை போட வேண்டும். 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் 10 நிமிடத்தில் நம்முடைய முகம் பளிச்சென்று மாறும். மேலும் மிருதுவான சருமத்தையும் பெற முடியும்.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றனர். தேன் என்பது நம்முடைய சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்க உதவக்கூடியது. மேலும் தயிறு நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி மிருதுவாக மாற்றக்கூடியது. இவை மூன்றுமே நம்முடைய சருமத்தை மிகவும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவும் என்பதால் இந்த மூன்று பொருட்களை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமம் பொலிவுடன், அழகாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: மிருதுவான பொலிவான முகத்தை பெற

மிகவும் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் நம்முடைய சருமத்தை பொலிவான சருமமாக மாற்ற முடியும் என்னும் பட்சத்தில் இதற்காக நேரத்தையும் பணத்தையும் அதிக அளவில் ஏன் செலவு செய்ய வேண்டும்? ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

- Advertisement -