- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமிருதுவான பொலிவான முகத்தை பெற

மிருதுவான பொலிவான முகத்தை பெற

- Advertisement -

குழந்தைகளின் சருமம் என்பது மிகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதை பார்க்கும் பொழுது நமக்கும் அப்படிப்பட்ட சருமம் கிடைக்காதா என்று ஏங்கும் நபர்கள் பலர் இருப்பார்கள். எந்த வயதானாலும் அப்படி குழந்தையைப் போல மிருதுவான சருமத்தை பெற வேண்டும் என்ற ஆசைப்படுபவர்களும் அதே சமயம் சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொலிவான முகத்தை பெற

நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நம்முடைய சருமத்திற்கும் நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமமும் ஆரோக்கியமாக திகழும். அந்த வகையில் பலவிதமான நன்மைகள் நிறைந்த ஒரு பொருளாக திகழ்வதுதான் சியா விதைகள். இதில் ஒமேகா-3, ஆன்ட்டி ஆக்சைடு அமிலங்கள், இயற்கையிலேயே இருக்கக்கூடிய கொழுப்புகள், நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலுக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறதோ அதே அளவிற்கு நம்முடைய அழகிற்கும் உதவும். அப்படிப்பட்ட சியா விதையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நாம் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சியா விதைகளை சேர்க்க வேண்டும். இதில் காய்ச்சாத பாலை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து விழுது போல் மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது இதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்த்து கலந்து ஒரு பேக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.

இதை முகம், கழுத்து, கை, கால் என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம். இதை உடல் முழுவதும் தேய்த்து கூட நாம் குளிக்கலாம். இதை தேய்த்து 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நாம் செய்து வந்தால் போதும் நம்முடைய சருமம் என்றும் இளமையாகவும் குழந்தைகளின் சருமம் போலவும் திகழும். அதோடு மட்டுமல்லாமல் சியா விதைகள் முகப்பருக்களையும், கரும்புள்ளிகளையும் நீக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதால் அழகான பொலிவான சருமத்தை பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கண் கருவளையம் போக

சியா விதைகளை உணவாக நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும். அதே போல் தான் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுதும் நம்முடைய சருமம் மிகவும் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும். ஒருமுறை பயன்படுத்தினாலே நல்ல பலன் தெரியும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும்.

சற்று முன்