- Advertisement -
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு நிகழ்வு எனில் அது திருமணம்தான் அதுவும் அந்தந்த காலத்தில் நடக்கும் பொழுதுதான் அதற்கான நிம்மதி மகிழ்ச்சி பலன் என அனைத்தையும் பெற முடியும் ஆனால் அநேகம் பேருக்கு இந்த திருமண யோகம் என்பது பெரும் கனவாகவே உள்ளது இதற்கு பலவகை காரணங்கள் இருக்கலாம்.

இதற்கு காரணங்கள் எதுவானாலும் நிச்சயம் அதற்கு தீர்வு வேண்டும் அல்லவா!. அப்படியான ஒரு தீர்வை தரக்கூடிய எளிமையான ஒரு வழிபாட்டு முறையை தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

திருமண யோகம் கூடி வர பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் ஆனால் அதற்கான முன் ஏற்பாடுகள் சிலவற்றை வியாழக்கிழமை அன்றே செய்ய வேண்டும் அது என்னவென்று பார்க்கலாம். வியாழக்கிழமை அன்று மருதாணி இலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மருதாணியை சுத்தமான எச்சில் படாத தண்ணீர் தேவை அரைத்து எடுக்க வேண்டும் அதேபோல் இதை வைக்கும் பாத்திரமும் சுத்தமான பாத்திரமாகவும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மருதாணி அப்படியே இருக்கட்டும் மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதற்கு நீங்கள் எடுத்து வைத்த மருதாணி பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி மருதாணி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள் கரைத்து இந்த தண்ணீரை ஆலயத்தில் இருக்கும் அன்னைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்திற்கான அனுமதியை நீங்கள் முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.

முடிந்த வரையில் இந்த பரிகாரத்தை யாருக்கு திருமணம் யோகம் வேண்டுமோ அவர்கள் கையாலே செய்வதுதான் சிறந்தது. வாய்ப்பில்லாதவர்களுக்கு பெற்றோர்களும் மற்றவர்களும் செய்யலாம் தவறில்லை. இந்த மருதாணி அபிஷேகத்தை கண்குளிர பார்த்தால் நிச்சயம் அவர்களின் திருமண தடை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பொதுவாகவே துர்க்கை அம்மனை நினைத்து வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது ஆனால் இந்த ஒரு வித்தியாசமான பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த திருமண தடை அகலும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை மூன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க முருகன் வழிபாடு

ஆகையால் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தை செய்து இதுவரை நடக்காது தள்ளி சென்று திருமண யோகத்தை விரைவில் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -