- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வாழ்வில் சிறக்க வெள்ளிக்கிழமை வழிபாடு

- Advertisement -

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் நம் அனைவருக்கும் அம்பாள் ஞாபகத்திற்கு வருவாள். அதையும் விட பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் என்ன வேலையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றுவதை பெரும்பாலான மக்கள் இன்றைய தினத்தில் கூட மறப்பதில்லை. அத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த நாளாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது.

சில சூழ்நிலை காரணமாக பெண்களால் வெள்ளிக்கிழமை அன்று விளக்கேற்ற இயலாது. அந்த சமயத்தில் ஆண்கள் சுத்தமான முறையில் விளக்கேற்ற வேண்டும். பெண்கள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆண்களும் அவர்களது பக்தியை எந்த வகையில் காட்டலாம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வெள்ளிக்கிழமை அன்று எந்த முறையில் வீட்டில் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வழிபாடு முறை

வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்பே எழுந்து, வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும். மத்த நாட்களில் நேரம் தவறி போனால் கூட பெரிய தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று சிறிது கூட தாமதம் ஏற்படாத வகையில் நாம் செயல்பட வேண்டும். ஏன் தாமதம் ஏற்பட வேண்டாம் என்று கூறுகிறோம் என்றால் ஆறு முதல் ஏழு மணி வரை அதாவது சூரியன் உதயத்திற்கு பின், ஒரு மணி நேரம் வரையிலும் சுக்கிர ஹோரை காலம் என்பர்.

அந்த சுக்கிர ஹோரை காலம் வெள்ளிக்கிழமை அன்று சீக்கிரமாகவே துவங்கிவிடும். எனவே அந்த சுக்கிர ஹோரை காலத்திற்கு முன்பு எழுந்து சானம் தெளித்து கோலமிடுவது மூலம், மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள் என்பது ஐதீகம். அந்த ஆறு முதல் ஏழு மணி வரை மகாலட்சுமி உள்ளே வரும் நேரம் அப்பொழுது வீட்டில் விளக்கானது கட்டாயம் ஏற்றி இருக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று முக்கியமாக வாங்க வேண்டிய ஒரு பொருள் உப்பு. அனைவரும் நன்றாக யோசித்துப் பாருங்கள் மகாலட்சுமி எங்கிருந்து தோற்றுவித்தாள்? பாற்கடலை கடையும் பொழுது தான் மகாலட்சுமி தோன்றினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே பாற்கடலில் எளிதாக கிடைக்கும் பொருளானது உப்பு மகாலட்சுமிக்கு மிக சிறந்த ஒரு பொருளாக கருதப்படுகிறது.

எனவே வெள்ளிக்கிழமையில் ஒரு ரூபாயாவது கொடுத்து உப்பை வாங்க வேண்டும். காசு கொடுத்து மட்டுமே அதை வாங்க வேண்டும், இலவசமாக வாங்க கூடாது. பின்பு அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த தானியங்கள் அனைத்தும் என் வீட்டில் என்றென்றுமே நிறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக பால் சார்ந்த பொருட்கள் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதுவும் சுக்கிரனின் அம்சம் பொருந்திய வெள்ளி பாத்திரத்தில் பாலை கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆனி திருமஞ்சன வழிபாடு

வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் இதையெல்லாம் நாம் செய்தோம் என்றால் அந்த வாரம் முழுவதும் நன்மை நடக்கும் என்று நம்பப் படுகிடைக்கிறது. எனவே இதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை செய்து பார்த்து பலன் அடையுங்கள். ஏனென்றால் முழு நம்பிக்கையுடன் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.

- Advertisement -