- Advertisement -

ஒவ்வொரு மாத பிறப்பும் மிகவும் விசேஷகரமான மாத பிறப்பாகவே திகழ்கிறது. அந்த மாத பிறப்பு நாள் அன்று விடியற்காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது அல்லது ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அந்த வகையில் ஆனி மாத பிறப்பானது சனிக்கிழமை நடைபெறுகிறது.

சனிக்கிழமை என்பது சனிபகவானிக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. ஆனி மாதம் என்பது சூரியன் மிதுன ராசிக்கு செல்லக்கூடிய மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மாதத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த ஆனி மாதத்தில் சந்திரன் கேதுடனும், சூரியன் புதன் மற்றும் சுக்கிரனுடனும் சேர்ந்து இருக்கிறார்கள். மேலும் சனிக்கிழமை இந்த ஆனி மாதமானது பிறக்கிறது. இந்த மாத பிறப்பில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிப்பாடானது சனிபகவானின் தாக்கத்தை குறைப்பதோடு நம்முடைய சுபகாரிய தடைகளையும் நீக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஆனி மாதம் என்பது யாரும் புதிதாக வீடு பால் காய்ச்சுவதோ அல்லது சுப நிகழ்ச்சிகளை செய்வதிலோ ஆர்வம் காட்ட மாட்டார்கள். காரணம் இந்த மாதம் தான் தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரம் முடியும் மாதமாக திகழ்கிறது. அதனால் இந்த மாதத்தில் முடிந்த அளவிற்கு சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பார்கள்.

- Advertisement -

ஆனி முதல் நாள் செய்யக்கூடிய வழிபாடு
ஆனி மாத பிறப்பான சனிக்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும். பிறகு காலையில் சாப்பாடு செய்து எச்சில் படாத சாப்பாட்டை எடுத்து அதில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கருப்பு எள் கலந்து காகத்திற்கு அன்னம் வைக்க வேண்டும்.

இயன்றவர்கள் பசுவிற்கு தங்களால் இயன்ற தானத்தை செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் கோவில்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் தரவேண்டும். இப்படி தருவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய சுபகாரிய தடைகள் ஆன குழந்தை பேரு இன்மை, திருமண தடை போன்றவை நீங்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமான ஒரு வழிப்பாடாக திகழ்வதுதான் நம்முடைய முன்னோர்களின் வழிபாடு. பொதுவாக அமாவாசை தினங்களில் தான் முன்னோர்களின் நினைத்து நாம் வழிபாடு செய்வோம்.

ஆனால் நாளைய ஆனி மாதப் பிறப்பு அன்று நம்முடைய இறந்த முன்னோர்களை நாம் மனதில் நினைத்து அமாவாசை தினத்தில் எப்படி வழிபாடு செய்வோம் அதே முறையில் வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதனால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: ஆனி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ஐந்து ராசிகள்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை செய்பவர்களுடைய நாளை தவறாமல் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -