- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

ஆண்டுதோறும் வளரும் அதிசய சிவலிங்கம் – விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

இந்தியாவை பொறுத்தவரை ஆன்மீக அதிசயங்களுக்கு பஞ்சமே இல்லை என்றால் அது மிகையாகாது. பிள்ளையார் பால் குடித்தது, அம்மன் கண்களை அசைத்து இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த மண்ணில் அரங்கேறி உள்ளது. அந்த வகையில் ஆண்டுதோறும் வளரும் அதிசய சிவ லிங்கத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள காரியாபந்த் என்னும் மாவட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கிராம் மரோடா என்னும் காட்டுப் பகுதி. இந்த காட்டில் பூதீஸ்வர் மகாதேவ் என்னும் அற்புதமான சிவலிங்கம் அமைந்துள்ளது.

- Advertisement -

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்துக்களுக்கும் இந்த சிவலிங்கம் மிக பரிட்சயமான ஒன்றாக திகழ்கிறது. இதற்க்கு காரணம் இந்த சிவலிங்கத்தில் உள்ள அற்புதமான வளரும் சக்தியே.

இந்த சிவலிங்கமானது ஆண்டிற்கு ஆண்டு வளர்ந்துகொண்டே இருக்கிறது. உயரத்திலும் சரி அகலத்திலும் சரி இதன் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. தற்சமயம் இது 18 அடி உயரமும் 20 அகலமும் உள்ளது.

- Advertisement -

இந்த சிவலிங்கத்தின் அளவு வருடாவருடம் மஹாசிவராத்திரி அன்று வருவாய் துறை அதிகாரிகளால் அளக்கப்படுகிறது. அப்போதும் 6 முதல் 8 இன்ச் வரை இந்த சிவலிங்கம் வளர்ந்திருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

இந்த சிவலிங்கத்தின் அளவு முதன் முதலில் 1952 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதுவரை அதன் உயரமும் அகலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. சிவலிங்கம் எப்படி வளர்கிறது. கல்லால் ஆனா சிவலிங்கம் எப்படி வருடா வருடம் வளர முடியும் ? இதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம் தான் என்ன ? இப்படி பல கேள்விகளுக்கான விடையை இன்று வரை யாராலும் அறியமுடியவில்லை. அறிவியலாளர்களும் இந்த சிவலிங்கத்தின் வளர்ச்சி என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

இதையும் படிக்கலாமே
ஓடும் நீரில் பாதாள லிங்கம் – காலத்தை கடந்து நிற்கும் ஒரு அதிசயம்

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள், ஆன்மீக கதைகள் மற்றும் மந்திரங்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -