- Advertisement -

தனுசு: ( மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்)

போராட்ட குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 29.10.2019 முதல் 13.11.2020 வரையில் ஜென்ம குருவாக ஆட்சி பெற்று அமரவிருக்கிறார் குரு பகவான் அதனால் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகிறது. மேலும் வேலை பளு, குடும்ப சுமை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

- Advertisement -

கடன் பிரச்சினையால் அவதிப்பட்ட நீங்கள் அதிலிருந்து விடுபட்டு பெருமூச்சு அடைவீர்கள். குடும்பத்தில் உள்ள தீராத கவலைகளும் தீர்ந்து நிம்மதி பெறுவீர்கள். தம்பதியருக்குள் இருந்த ஒற்றுமை மாறி சிறு சிறு பிரிவுகள் நேரிடலாம் எனவே யாராவது ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீண் பிடிவாதம் விபரீதத்தில் முடியும். வெளியூர் செல்ல திட்டமிட்டு இருந்தால் அதனை தள்ளி வைக்கலாம்.

குரு 5ஆம் வீட்டை பார்ப்பதால் சிலர்க்கு மழலை செல்வம் கிடைக்கப்பெறும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்காதீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள். முன் பின் தெரியாத ஒருவரை நம்பி எதிலும் பணம் போடாதீர்கள். ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றுபவர்கள் தான் உங்களை சுற்றி இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

- Advertisement -
Guru peyarchi palangal Dhanusu

பொருளாதாரம்:
குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களது ராசிக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை திருப்தி தரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தன வரவு அதிகரிக்கும்.
தெரியாத விஷயத்தில் இறங்காதீர்கள். புதிய முதலீடுகளை செய்யாதீர்கள். பணப்புழக்கம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

தொழில்:
வியாபாரிகள், விவசாயிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு உங்கள் வியாபாரத்தை விருத்தியடைய செய்வீர்கள். உங்கள் உழைப்பில் சுறுசுறுப்பு பெறுவீர்கள். சுற்றமும், நட்பும் உதவிகரமாக இருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை பயக்கும். உங்கள் நிதானத்தினால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை பெற கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.

- Advertisement -
Guru peyarchi palangal Dhanusu

கல்வி:
கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற கூடுதல் நினைவாற்றல் தேவைப்படும். அதனால் கவனம் சிதறாமல் முழு கவனத்துடன் படித்து தேர்வு எழுத செல்ல வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்கள் விமர்சனங்களை உள்வாங்கி தங்களை மாற்றிக் கொண்டால் நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து எதிர்பார்த்த வேலை கிடைக்க தாமதமாகும்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை:
உங்கள் பேச்சால் பல பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. எதை சொல்வதனாலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து சொல்லுங்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். வழக்கு தாமதமாகும். வீண் பழி சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

பரிகாரம்:
திட்டையில் உள்ள குரு பகவான் திருத்தலத்திற்கு சென்று குருபகவானை ஒரு முறை வணங்கி வாருங்கள். ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்கி கொடுங்கள். வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

- Advertisement -