- Advertisement -
குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – துலாம்

துலாம்: (சித்திரை 3, 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்து கொண்டு 10, 12, 2 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே துலாம் ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது திடீர் லாபம், பகை, ஏமாற்றம், வாய்ப்புகள் என்று மாறி மாறி பலன்களைக் கொடுக்கக் கூடிய காலமாக அமைய இருக்கிறது. வாகன ரீதியான பயணங்களில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் சாதக பலன் தரும்.

- Advertisement -

உத்தியோகம் மற்றும் தொழில்:
உத்தியோகத்தை பொறுத்தவரை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றங்கள் நிகழும். கேட்ட இடத்தில் இடமாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையக்கூடும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்த மட்டும் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்றாலும் பொருட் தேக்கம், நஷ்டங்கள் போன்றவை சமாளிக்கக்கூடிய அளவில் இருக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கு புதிய உத்திகளை கையாள்வது சிறந்த பலன் தரும். தன் கையே தனக்கு உதவி என்பதைப் போல் உங்களை மட்டுமே நம்பி செயல்பட வேண்டிய காலமாக அமைய இருக்கிறது.

Guru peyarchi palangal Thulam

பொருளாதாரம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பாகவே இருக்கும். எனினும் ஆடம்பரமாக உங்களால் செலவு செய்ய முடியாமல் போகலாம். வருட இறுதியில் திடீர் பண வரவு திக்குமுக்காட செய்யலாம். கையிருப்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். தேவையற்ற வகையில் செலவு செய்வதை குறைத்துக் கொண்டால் பொருளாதாரம் சீராகவே இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களை தவிர வேறு யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. கடன்கள் தீர கால பைரவரை வணங்கி வாருங்கள்.

- Advertisement -

குடும்ப வாழ்க்கை:
குடும்ப உறவுகளை பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சிக்குப் பின் ஒற்றுமையாகவே இருக்கும். இதுவரை சண்டை போட்டு பிரிந்தவர்கள் கூட மீண்டும் வந்து இணைவார்கள். உங்களைவிட மூத்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாக நேரலாம். கணவன்-மனைவி உறவை பொறுத்தவரை அவ்வப்போது சிறுசிறு ஊடல்கள் இருந்தாலும், பெரிதாக ஒற்றுமை குறைவு இருக்காது. சரியான சமயத்தில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசினால் புதிய புரிதல் உருவாகும்.

Guru peyarchi palangal Thulam

ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு சுமாராகவே இருக்கும். நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுய ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பது அவசியமாக இருக்கும். மருத்துவ செலவுகளை செய்வதற்கான காலமிது என்பதால் எச்சரிக்கை அதிகம் தேவை. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. குறிப்பாக உங்கள் ராசிக்கு அடிக்கடி முதுகு தண்டுவடம், மூட்டு போன்ற இடங்களில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

செய்ய வேண்டிய பரிகாரம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த குருபெயர்ச்சியில் சிவ வழிபாடு மேற்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். பித்ரு தோஷம் இருப்பவர்கள் அமாவாசை நாட்களில் பித்ரு பூஜையும் செய்துவர நன்மைகள் நடைபெறும். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்வது சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கன்னி

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -