- Advertisement -

குரு வார பௌர்ணமி நிலை வாசல் பரிகாரம்

- Advertisement -

இன்றைய தினம் 10-07-2025 பௌர்ணமி. வியாழக்கிழமை அன்று பௌர்ணமி திதி வந்திருப்பது அதிசிறப்பானது. இதை குருவார பௌர்ணமி என்று சொல்லுவார்கள். இன்றைய தினம் வியாழக்கிழமையில் குரு பூர்ணிமாவும் சேர்ந்திருப்பது, இரட்டிப்பு சிறப்பை நமக்கு கொடுக்கிறது இந்த நாளில் அம்பாள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு, சந்திர பகவான் வழிபாடு, அனைத்துமே நற்பலன்களை கொடுக்கக் கூடியது.

இன்றைய தினம் மாலை நேரத்தில் சந்திர பகவானை தரிசனம் செய்து, வேண்டுதல் வைத்தால், உங்களுடைய வேண்டுதலானது அதி விரைவாக பலிக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். மன தைரியம் பிறக்கும். ஜாதக கட்டத்தில் சந்திர பகவானால் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும், அதன் மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் வராது. இது முதல் விஷயம்.

- Advertisement -

இது தவிர குலதெய்வத்தின் அருள் ஆசியைப் பெறவும், லக்ஷ்மி கடாட்சத்தை பெறவும் இன்று மாலை 6 மணி அளவில் வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு சக்தி வாய்ந்த தீபத்தை பற்றி இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்று மாலை 6 மணி அளவில் சந்திர பகவான், உதயமாக கூடிய அந்த நேரத்தில், முதலில் நிலை வாசலில் இரண்டு பக்கமும் மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தீபத்தை ஏற்றும் போது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். அந்த குலதெய்வம் வீட்டிற்குள் வர வேண்டும்.

- Advertisement -

குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நிலை வாசப்படியில் இருந்தபடியே நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பெரிய பெரிய கோவில்கள் கருவறையில் நின்று வேண்டுதல் வைத்தால், எப்படி அதிவிரைவாக பலிக்குமோ, அதேபோலத்தான் நம்முடைய நிலை வாசல் படியிலும், வேண்டுதல் வைத்தால் அது உடனே பலிக்கும். நிலை வாசலுக்கு அவ்வளவு நேர்மறை ஆற்றல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலை வாசலில் இன்று மாலை 6 டு 7 ஒரு மணி நேரத்திற்கு தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், உங்கள் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும். நிலை வாசல் படியில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சந்திர பகவானையும் குல தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குரு பௌர்ணமி திருச்செந்தூர் முருகன் பரிகாரம்

பிறகு மொட்டைமாடிக்கோ அல்லது பால்கனிக்கோ சென்று உதயமாகி இருக்கும் முழு நிலவைப் பார்த்து, உங்களுடைய பிரார்த்தனையை சொல்ல வேண்டும். நிலவு வெளிச்சத்தில் சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாக அமர்ந்து, தியானம் செய்யுங்கள். மனதில் எவ்வளவு சிக்கல்கள் குழப்பங்கள் இருந்தாலும், அதற்கான ஒரு தீர்வை அந்த சந்திர பகவான் நிச்சயம் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார். இந்த எளிமையான வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இன்றைய தினம் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -
Published by