இன்று குரு பூர்ணிமா. குருநாளில் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி. இதை குரு பௌர்ணமி என்றும் சொல்லுவார்கள். திருச்செந்தூர் முருகனின் ஸ்தலம், குருவுக்கு உரிய ஸ்தலமாக சொல்லப்படுகிறது. திருச்செந்தூர் முருகனை எத்தனையோ பேர் குருவாக நினைத்து வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். இன்றைய தினம் திருச்செந்தூர் முருகனை நினைத்து முருக பக்தர்களான நாம் செய்ய வேண்டிய ஒரு அதி அற்புதமான விஷயத்தை பற்றிதான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
திருச்செந்தூர் முருகன் துணை
பொதுவாகவே பௌர்ணமி நாளில் திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்வது நல்லது என்று சொல்லுவார்கள். எல்லோராலும் இதை பின்பற்ற முடியாது. அதிலும் குறிப்பாக வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பௌர்ணமி நாளில் திருச்செந்தூர் முருகனை சென்று தரிசனம் செய்யும் பாக்கியம், அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. திருச்செந்தூர் முருகன் முருகனுக்கு சமீபமாக, கடந்த ஏழாம் தேதி தான் கும்பாபிஷேகமும் நடந்தது. இந்த கும்பாபிஷேக நன்னாளோடு சேர்த்து வந்திருக்கும் இந்த குரு பௌர்ணமி நாளில் திருச்செந்தூர் முருகனை பற்றி நாம் பேசவில்லை என்றால் எப்படி.
சரி திருச்செந்தூர் முருகனை ஒருமுறை எல்லோரும் மனதில் நினைத்துக் கொண்டு, மன கண்களால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து, வணங்கிக் கொள்ளுங்கள். “கருணை கடலே கந்தா போற்றி”, என்ற மந்திரத்தை சொல்லி இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
திருச்செந்தூர் முருகன் பரிகாரம்
இந்த குரு பூர்ணிமா அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில், அன்னதானம் வெகு விமர்சையாக நடக்கும். இன்று நம்முடைய குருவான திருச்செந்தூர் முருகனை மனதார நினைத்துக் கொண்டு, இரண்டு பேருக்காவது, சாப்பாடு வாங்கி அன்னதானம் கொடுங்கள். அன்னதானம் கொடுக்கும் போது இந்த “திருச்செந்தூர் முருகா போற்றி, திருச்செந்தூர் முருகா போற்றி, கருணைக் கடலை கந்தா போற்றி” என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே அந்த அன்னதானத்தை செய்யுங்கள்.
இந்த அன்னதானம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உரியது. இந்த அன்னதானத்தை நாம் செய்யவில்லை, அந்த திருச்செந்தூர் முருகன் கருணையால் இந்த நல்லது நடக்கிறது, என்று மனதில் நினைத்துக் கொண்டு இரண்டு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து, நீங்கள் என்ன பிரார்த்தனையை இன்று திருச்செந்தூர் முருகனிடம் வைத்தாலும் சரி, அது அடுத்த 365 நாட்களுக்குள் நிறைவேறும்.
வியாபாரத்தில் முன்னேற, செய்யும் வேலையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க, உங்களுடைய குடும்பத்தில் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால், அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வு கிடைக்க, நீங்கள் இப்போது இருக்கும் சூழ்நிலையிலிருந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இந்த அன்னதானத்தை இன்று செஞ்சிருங்க போதும். நீங்கள் கேட்ட வரங்களை குரு ஸ்தானத்திலிருந்து உங்களுக்கு கொடுத்து விடுவார் அந்த முருகப்பெருமான்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி தீபம்
இது பூஜை அறையில் சென்று விளக்கு ஏற்றி சாமி கும்பிட கூடிய பரிகாரம் இல்லை. ஆத்மார்த்தமாக அடுத்தவர்களுக்கு செய்யக்கூடிய தானம். குறைந்தபட்சம் இரண்டு பேர். அதிகபட்சம் உங்களால் எத்தனை பேருக்கு இன்று சாப்பாடு வாங்கி கொடுக்க முடிந்தாலும் கொடுக்கலாம். இதுவே இந்த நாளின் சிறந்த பரிகாரணமாகவும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் திருச்செந்தூர் முருகனின் மீது பாரத்தை போட்டு நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.