
அடர்த்தியாக முடி வளர்ப்பது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லைங்க. ரொம்ப ரொம்ப சுலபமான வேலை தான். தலைமுடிக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய இயற்கையாக சொல்லப்பட்டுள்ள அழகு குறிப்புகள் ஏராளமாக உள்ளது. அதில் உங்களுடைய தலை முடிக்கு எது செட் ஆகுது, அப்படின்னு கண்டுபிடிக்க வேண்டிய வேலை உங்க கையில்தான் உள்ளது. நிறைய ஹேர் பேக், ஹேர் சீரும் பயன்படுத்துவீர்கள். அதில் எதை பயன்படுத்தினால் உங்கள் தலைமுடி உதிராமல் இருக்கிறது என்பதை நீங்கள் தான் கவனித்து பார்க்க வேண்டும். சில பேருக்கு எல்லா ஹார் பேர்க்கும் செட் ஆகும். சில பேருக்கு சிலது அலர்ஜியை கொடுக்கும்.
உங்களுக்கு அலர்ஜி கொடுக்கும் விஷயங்களை தவிர்த்து விட்டு, உங்கள் உடலுக்கு தகுந்தபடி ஹேர் பேக்குகளை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும். அந்த வரிசையில் இன்று நாம் ஒரு சுலபமான ஹேர் சீரம் தான் பார்க்கப் போகின்றோம்.
வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இதை தயார் செய்துவிடலாம். இந்த சீரமில் அவ்வளவு சத்து நிறைந்திருக்கிறது. பெரும்பாலும் எல்லோருடைய தலைக்கும் இந்த ஹேர் சிரம் செட் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்களும் ஒரு மாதம் இதை முயற்சி செய்து பார்க்கலாம். தலைமுடி உதிர்வு எந்த அளவுக்கு குறைந்து இருக்கிறது, தலைமுடி வளர்ச்சியில் எந்த அளவுக்கு முன்னேற்றம் தெரிகிறது என்று பார்த்துவிட்டு பிறகு இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தலை முடிக்கு ஊட்டச்சத்து தரும் ஹேர் சீரம்:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். டீ தூள் 1 ஸ்பூன், வெங்காயத்தோல் சிறிதளவு, வெந்தயம் 1 ஸ்பூன், மருதாணி இலை 1 கைப்பிடி அளவு, போட வேண்டும். இரண்டு பெரிய வெங்காயத்தின் தோல்கள் போட்டால் கூட போதும். ஒரு டம்ளர் தண்ணிக்கு அதுவே போதுமானது. தண்ணீர் நன்றாக கொதித்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டி வந்ததும், அதை வடிகட்டி நன்றாக ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஐந்து நாட்கள் கெட்டுப்போகாது.
இதை அப்படியே வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம். அப்படி இல்லை என்றால் ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு வேர்க்கால்களில் வைத்து இந்த ஹேர் சிரமம் மசாஜ் செய்தாலும் சரிதான். இந்த ஹேர் சீரமை வாரத்தில் மூன்று நாட்கள் போட்டு வர உங்களுடைய தலைமுடி கருகருவென காடு போல வளர தொடங்கிவிடும். நிஜமாவே நல்ல ரிசல்ட் தெரியும். நீங்க வேணும்னா ஒரு மாதத்திற்கு இதை முயற்சி செய்து பாருங்கள். குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய தலைக்கு செட்டாகினால் தொடர்ந்து பின்பற்றி பலன் பெறலாம்.
இதையும் படிக்கலாமே: 30 நாட்களில் ஒவ்வொரு முடியும் முட்டி மோதி, போட்டி போட்டுக் கொண்டு வளர தொடங்கும். இந்த 2 பொருட்களை சேர்த்து ஹேர் பேக்கை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.
இதோடு சேர்த்து நீங்கள் இன்னும் ஒரு சில விஷயங்களை பின்பற்றி வர வேண்டும். நீங்கள் அடிக்கடி வெளியே சென்று வருபவர்களாக இருந்தால், கட்டாயம் வாரத்தில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். தலையில் நிறைய அழுக்கு சேர்ந்து, அந்த அழுக்கு அரிப்பை கொடுத்து சுண்டை கொடுத்தாலும், தலைமுடியில் இன்பெக்ஷன் ஏற்பட்டு முடி நிறைய கொட்ட தொடங்கி விடும். முடி வளர்ச்சி அதிகரிக்க தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் உங்களுடைய வேலை.