30 நாட்களில் ஒவ்வொரு முடியும் முட்டி மோதி, போட்டி போட்டுக் கொண்டு வளர தொடங்கும். இந்த 2 பொருட்களை சேர்த்து ஹேர் பேக்கை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

hair30
- Advertisement -

சில பேருக்கு முடி கையோடு உதிர்ந்து வரும். எண்ணெய் வைத்தால் முடி கொட்டாது என்று சொல்லுவோம் அல்லவா. சில பேர் தலையில் எண்ணெய் வைத்த உடனேயே முடி கொட்ட தொடங்கி விடும். இதற்கு என்ன காரணம் தெரியுமா. தலையில் அதிக அழுக்கு இருக்கும்போது அதன் மேலே நிறைய எண்ணெய் வைக்கும் போது சில பேருக்கு முடி உதிர்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே தலையில் அழிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அழுக்கு இல்லாத தலையில் எண்ணெய் வைத்து பிறகு மீண்டும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். தலையில் அழுக்கு நிறைய இருந்தால் முதலில் தலையை வாஷ் செய்து கொள்ளவும். முடி உதிர்வை கட்டுப்படுத்த முதலில் மேல் சொன்ன விஷயத்தை முயற்சி செய்து பாருங்கள். அடுத்து அதிக முடி உதிர்வு பிரச்சனையை நிறுத்த அழகு குறிப்பு என்ன என்று பார்த்து விடுவோம்.

அதிக முடி உதிர்வை தடுத்து நிறுத்தும் ஹேர் பேக்:
முடி உதிர்வு பிரச்சனையை உடனடியாக சரி செய்து உடனடியாக முடியை அடர்த்தியாக வளரச் செய்ய ஒரு சூப்பரான ஹேர் பேக். இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஃபிளாக் சீட்ஸ். ஆளி விதை மற்றும் விளக்கு எண்ணெய். இந்த இரண்டே பொருட்கள் தான். முதலில் ஆளி விதையை தேவையான அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டி கொழகொழப்பாக இருக்கும் லிக்விடை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆளி விதையை கொதிக்க விட்டு சூடாக இருக்கும் போதே வடிகட்டினால் தான் அந்த பேஸ்ட்டை சுலபமாக தனியாக எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

கொழ கொழப்பாக இருக்கும் அந்த பேஸ்ட்டை மிக்ஸி ஜாரில் போடுங்கள். இதோடு நன்றாக திக்காக கிடைக்கக்கூடிய விலக்கெண்ணெயை நான்கு டேபிள் ஸ்பூன் அளவு அந்த ஜெல்லோடு ஊற்றி மிக்ஸி ஜாரை ஒரு ஓட்டு ஓட்டுகள்.(தேவைப்பட்டால் கூடுதலாக விளக்கெண்ணெய் கூட சேர்த்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.) இந்த விளக்கு எண்ணெயும், ஆளி விதை ஜெல்லும் ஒன்றாக கலந்து விடும்.

இதை அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றி எடுத்து உங்களுடைய தலையில் போட வேண்டியதுதான். இது கொழகொழப்பாக அப்ளை செய்வதற்கு சுலபமாக இருக்கும். வேர்க்கால்களில் நன்றாக இந்த பேக்கை படும்படி போட்டு விடுங்கள். மீதம் ஹேர் பேக் இருந்தால் நுனி முடி வரை தடவலாம். தவறு கிடையாது. தலைமுடியில் இருக்கும் வெடிப்பை கூட இது சரி செய்யும். விளக்கெண்ணெய் குளிர்ச்சி நிறைந்த பொருள் தான். ஆனால், அதை இந்த பிளாக் சீட் ஜெல்லுடன் சேர்த்து போடும்போது உங்களுக்கு பெரியதாக எந்த பாதிப்பையும் கொடுக்காது .

- Advertisement -

உங்களுக்கு இந்த ஆளி விதை வாங்குவதில் பிரச்சனை இருக்கிறது. அது கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இரண்டு முட்டையை மிக்ஸி ஜாரில் உடைத்து ஊற்றி, அதில் நான்கைந்து டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெயை ஊற்றி அடித்து மயோனிஸ் போல அதை எடுத்து உங்களுடைய தலை முடியில் தடவிக் கொண்டாலும் சூப்பராக முடி வளர்ச்சி பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: எல்லா விதமான தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தரமாக ஒரு முடிவு கட்ட மாதத்தில் 1 முறை இந்த ஹேர் பேக்கை போட்டால் கூட போதும். முடி கொட்டுவது நிச்சயம் உடனே குறையும்ன்னா பாத்துக்கோங்க.

பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளித்துப் பாருங்கள். உங்களுடைய முடி இன்ஸ்டன்ட் ஆக அடர்த்தியாக தெரியும். முடி உதிர்வு குறைந்து இருப்பதையும் உணர்வீர்கள். எளிமையான இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -