
இந்த காலத்தில் அதிகமான நபர்கள் சந்திக்கக்கூடிய முடி பிரச்சனைகள் இரண்டு. ஒன்று முடி உதித்தல் மற்றொன்று இளநரை. இவை இரண்டையும் மாற்றுவதற்கு உதவக்கூடிய அற்புதமான ஒரு எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணையை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
முடி உதிர்தல், இளநரை ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் பல காரணங்களால் ஏற்படுகிறது. இருப்பினும் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுவது முடிக்கு போதிய போஷாக்கு இல்லாமை தான். இந்த போஷாக்கை ஏற்படுத்துவதற்கு நாம் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் முடியை நன்றாக பராமரிக்கவும் வேண்டும். இப்பொழுது எண்ணையை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் தேவைப்படும். அவை நெல்லிக்காய், வெங்காயம், கருவேப்பிலை. நெல்லிக்காயில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றது. யாரொருவர் நெல்லிக்காயை தினமும் உணவாக எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு நரை, திரை, மூப்பு என்ற எதுவும் அணுகாது என்று கூறப்படுகிறது. அடுத்ததாக வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் முடி உதிர்தல் பிரச்சனையை நிறுத்தி முடியை அடர்த்தியாக வளர வைக்கும். அடுத்ததாக கருவேப்பிலை. கருவேப்பிலையில் இருக்கக்கூடிய பச்சை நிறம் முடிக்கு கருமை நிறத்தை ஏற்படுத்தும்.
ஐந்து பெரிய நெல்லிக்காயை எடுத்து பொடி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து அதையும் தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் கிடைக்காத பட்சத்தில் பெரிய வெங்காயம் மூன்று எடுத்துக் கொண்டால் போதும். இப்பொழுது இவை இரண்டையும் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் 200 மில்லி அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றிய உடனேயே அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து விட வேண்டும். இந்த விழுதில் தண்ணீர் ஊற்றக்கூடாது. நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தில் இருக்கும் தண்ணியே போதுமானதாக இருக்கும். எண்ணெய் 10 நிமிடம் நன்றாக கொதிக்கட்டும். பிறகு அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையை சேர்த்து பத்து நிமிடம் அடுப்பிலேயே வைத்திருந்து அடுப்பை ஆப் செய்து விட வேண்டும்.
இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்து வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக தலைக்கு தேய்க்கும் எண்ணையாக இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். அவ்வாறு விருப்பமில்லாதவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மைல்டான ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடலாம்.
இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே தயார் செஞ்ச இந்த ஒரு கிரீமை தினமும் உபயோகப்படுத்தினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றுவிடும். அதேபோல் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் இளநரை பிரச்சினை இருப்பவர்கள் இந்த எண்ணெயை உபயோகிக்கும் பொழுது படிப்படியாக அவர்களுடைய நரை பிரச்சினை என்பது முற்றிலும் தீர்ந்து 60 வயதானாலும் மறுபடியும் நரை வராமல் தடுக்கப்படும்.