வீட்டிலேயே தயார் செஞ்ச இந்த ஒரு கிரீமை தினமும் உபயோகப்படுத்தினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

rice cream
- Advertisement -

அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காத நபர்கள் யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஒவ்வொருவரை பொறுத்தவரை அவர்களின் ரீதியாக அழகு என்பதற்கு பல வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அழகை ஆராதிக்காத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்த வகையில் முகம் பளிச்சென்று அழகாக இருப்பதற்கு நாம் வீட்டிலேயே எந்த முறையில் எந்த பொருளை வைத்து ஃபேஸ் க்ரீம் தயார் செய்யலாம் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்குவதற்கும், சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமை விளக்குவதற்கும், பருக்கள் வராமல் தடுப்பதற்கும், பருக்களின் வடுக்கள் மறைவதற்கும், முகச்சுருக்கங்கள் இன்றி இளமையாக இருப்பதற்கும் பல ஃபேஸ் க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை உபயோகப்படுத்தினால் அதில் இருக்கக் கூடிய கெமிக்கலால் நமக்கு பக்க விளைவுகள் என்பது ஏற்படும்.

- Advertisement -

மேற்ச்சொன்ன அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய இந்த ஒரு பொருளை வைத்து ஃபேஸ் க்ரீம் மிகவும் எளிமையான முறையில் நம்மால் தயார் செய்ய முடியும் என்னும் பட்சத்தில் நாம் எதற்காக கடைகளில் சென்று வாங்க வேண்டும். முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா? சரி வாருங்கள்.

இப்பொழுது வீட்டிலேயே ஃபேஸ் க்ரீம் தயார் செய்வதற்கு நமக்கு தேவைப்படும் மிக முக்கியமான பொருள் நாம் சாப்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் அரிசி தான். அரிசியில் விட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்சைடுகள் இருப்பதால் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகளை நீக்கி முகத்தை வெள்ளையாக்க உதவுகிறது. மேலும் சுருக்கங்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. அது மட்டுமில்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகளும், கரும்புள்ளிகளும், கருமைகளும் மறைவதற்கு இந்த அரிசி உதவுகிறது.

- Advertisement -

நான்கு ஸ்பூன் அளவிற்கு அரிசியை எடுத்து இரண்டு முறை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு ஒரு மணி நேரம் அரிசியை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒன்றரைக் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நம் ஊற வைத்திருக்கும் அரிசியையும் அதில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக வேகும் அளவிற்கு அரிசியை வேக விடுங்கள். தண்ணீர் அனைத்தும் வற்றிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அரிசி சாதத்தை ஆறவிட வேண்டும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆரிய அரிசி சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் என்று சொல்லக் கூடிய பன்னீரை சேர்க்க வேண்டும். அடுத்ததாக நாம் விருப்பப்பட்டால் அதில் விட்டமின் இ கேப்ஸ்யூல் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த கிரீமை ஒரு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தினமும் இந்த கிரீமை நாம் முகத்தில் தடவி வர மூன்றே நாட்களில் நம் முகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு ஹேர் சீரம் உபயோகித்தால் தலை முடி பிரச்சனை அனைத்தும் தீரும்.

இந்த கிரீமை பிரிட்ஜிலேயே வைத்து பயன்படுத்தினால் 15 நாட்கள் வரை இவை கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால் அவ்வப்பொழுது இந்த கிரீமை தயார் செய்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -