- Advertisement -

மாணவர்கள் ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு

- Advertisement -

இப்போது இருக்கக்கூடிய பெற்றவர்களின் கவலையே, தங்களுடைய பிள்ளைகள் சரியாக படிப்பது இல்லை என்பது தான். அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தாலும், படித்தது ஞாபகத்தில் நிற்கவில்லை, என்னுடைய குழந்தைக்கு பெரிய அளவில் கனவு இருக்கிறது. ஆனால் அந்த கனவை நினைவாக்க வேண்டும் என்றால் அவன் திறமைசாலியாக மாற வேண்டும்.

ஞாபக சக்தி உள்ளவனாக மாற வேண்டும் என்று நினைக்கும் பெற்றவர்கள், வியாழக்கிழமை தோறும் ஹயக்ரீவருக்கு பின் சொல்லக்கூடிய முறையில், பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரித்து, வழிபாடு செய்யுங்கள். இந்த பூஜையை பிள்ளைகள்தான் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெற்றவர்கள் இந்த வழிபாட்டை செய்தாலும் உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தொடங்கும். உங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். அது என்ன வழிபாடு ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வியாழக்கிழமை ஹயக்ரீவர் வழிபாடு

வியாழக்கிழமை காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வரவும். பூஜை அறையில் சின்னதாக ஹயக்ரீவர் படம் வாங்கி வையுங்கள். படிக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், ஹயக்ரீவர் படம் இருப்பது சிறப்பு. ஹயக்ரீவர் படம் இல்லை தற்போது என்ன செய்வது என்றால், பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஹயக்ரீவரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள் போதும். ஹயக்ரீவரின் திருவுருவப் படத்திற்கு ரோஜா பூக்களை வாங்கி போடுங்கள்.

கொஞ்சம் உதிரி புஷ்பங்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு பேரிச்சம் பழம் நெய்வேத்தியமாக ஹயக்ரீவர் முன்னால் வைத்து விடுங்கள். ‘ஓம் நமோ ஹயக்ரீவாய நமஹ’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி உதிரி ரோஜா பூக்களால் ஹயக்ரீவருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த பேரிச்சம் பழத்தை உங்களுடைய பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூன்று பிள்ளைகள் இருந்தால் அதற்கு ஏற்றது போல கூடுதலாக பேரீச்சம் பழம் வைத்துக் கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு தான் இந்த வழிபாடு என்று கிடையாது. காலேஜ்படிக்கும் உங்களுடைய பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

முடிந்தால் உங்களுடைய பிள்ளைகளை கூட அமரச் செய்து இந்த ஹயக்ரீவர் மந்திரத்தை அவர்கள் வாயால் சொல்லுவது சிறப்பு. தாய் தந்தை யார் வேண்டுமென்றாலும் பாரம் தோறும் வியாழக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வியாழக்கிழமை தோறும் மேல் சொன்ன முறைப்படி ஹயக்ரீவரை வழிபாடு செய்பவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் நிச்சயம் நன்றாக படிக்கும். அவர்களுக்கு ஞாபக சக்தி கூடுதலாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற

நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்கு உண்டான அத்தனை தகுதியும் அந்த பிள்ளைகளுக்கு வந்து விடும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு நல்லது செய்யக்கூடிய இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -