- Advertisement -

நம் வீட்டில் எந்த வகையான விளக்கினை ஏற்றினாலும், அதாவது குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, சட்டி விளக்கு, ஜோதி விளக்கு இப்படி பலவகைப்பட்ட விளக்குகளில் எதுவாக இருந்தாலும் சரி, அதை நாம் இப்படித் தான் ஏற்ற வேண்டும், இப்படி ஏற்ற கூடாது என்ற வரைமுறைகளை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். விளக்கு ஏற்றும் பொழுது நாம் செய்யும் சிறு சிறு தவறுகளினால் இறைவனிடமிருந்து, அருளை முழுமையாக நம்மால் பெற முடிவதில்லை என்பது சாஸ்திரங்களின் கூற்று.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த பஞ்ச பூதங்களிலும் இறைவன் இருக்கின்றான். நெருப்பின் ஒளியை ஜோதியாக நாம் வீட்டின் விளக்கில் ஏற்றுகிறோம். இந்த ஜோதியில் ஏற்படும் பிரகாசமானது வீட்டில் உள்ள இருளை மட்டுமல்லாமல் நம் மனதில் உள்ள இருளையும் நீக்கும் என்பது தான் இதன் பொருள்.

- Advertisement -

தீபத்தின் ஒளியில், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இருப்பதாக நம் இதிகாசங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட தீபத்தை நம் வீட்டில் ஏற்றும் போது சில முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி இருக்க வேண்டும். இறந்தவர்களின் படத்திற்கு விளக்கினை ஏற்றும் போது மட்டும்தான் வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் விளக்கின் திசையை மாற்றக் கூடாது. நாம் கோவில்களில் விளக்கினை ஏற்றினாலும், நம் வீட்டில் விளக்கினை ஏற்றினாலும், இரண்டு கால்களையும் மடக்கி சம்மணம் இட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். அந்த குத்துவிளக்கினை கீழே வைத்து ஏற்றும் பொழுது குனிந்த நிலையில் தான் ஏற்றுவோம். அப்படி ஏற்றக் கூடாது. தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.

அடுத்ததாக குத்துக்காலிட்டு விளக்கு ஏற்றும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அதனை இன்றுடன் விட்டு விடுங்கள். இப்படி நாம் விளக்கினை ஏற்றும் பொழுது அதற்கான பலனை நம்மால் முழுமையாக அடைய முடியாது.

- Advertisement -

தீபத்தினை நாம் ஏற்றும் பொழுது கை, கால்களை உதறிக் கொண்டோ, சோம்பல் முறித்துக் கொண்டோ ஏற்றக்கூடாது. இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக் கொண்டு விளக்கினை ஏற்றக்கூடாது. அதாவது தும்பி கொண்டோ, கொட்டாவி விட்டுக்கொண்டோ தீபத்தினை ஏற்றக்கூடாது. வேலைக்கு செல்லும் பெண்கள் மாலை வீடு திரும்பியதும், 6 மணி ஆகிவிட்டது, விளக்கு ஏற்ற வேண்டும் என்று கடமைக்காக மட்டும் விளக்கு ஏற்றுவது தவறு. எப்பொழுதும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு கை, கால், முகம் கழுவி விட்டு தான் ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் பொழுது நம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பிரச்சனைகளையோ அல்லது பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டோ விளக்கினை ஏற்ற கூடாது. கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றும் பொழுது அநாவசியமான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. விளக்கினை ஏற்றி முடித்து விட்டு ஒரு நிமிடம் மனதார தியானம் செய்து தரையில் நமஸ்காரம் செய்து வழிபடுவது சிறந்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
ஆரா என்றால் என்ன?

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have details of Veetil vilakku etrum murai in Tamil. Veetil vilakku vaipathu eppadi. vilakku etrum palangal.

- Advertisement -