- Advertisement -

அட்சய திருதியைவந்துவிட்டால் தங்கம் வாங்க வேண்டும் வெள்ளி வாங்க வேண்டும் என்று பலரும் அட்சய திருதியை வருவதற்கு முன்பாகவே முன்பதிவு செய்துவிட்டு அன்றைய நாளில் தங்கத்தை வாங்க ஆசைப்படுவார்கள். அதற்கு காரணம் அன்றைய தினத்தில் தங்கத்தை வாங்கினால் நம் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் தான். தங்கம் விற்கும் விரைத்து இன்றைய காலத்தில் தங்கத்தை வாங்க முடியுமா? தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய எந்த மூன்று பொருட்களை வாங்கி வைத்து குலதெய்வத்தை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை என்று கூறுகிறோம். இந்த வருடம் இந்த அட்சய திருதியை மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. பொதுவாக அட்சய திருதியை அன்று தான் மகாலட்சுமி தாயார் திருப்பாற்கடலில் இருந்து தோன்றினார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படிப்பட்ட அட்சய திருதியையானது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷகரமான ஒன்றாக திகழ்கிறது.

- Advertisement -

அன்றைய தினம் காலை 6:35 மணிக்கு மேல் தான் அட்சய திருதியை ஆரம்பிக்கிறது என்பதால் சுக்கிர ஹோரை 7:00 மணிக்குள் நிறைவடைகிறது என்பதாலும் சரியாக 6:40 மணியிலிருந்து 7:00 மணிக்குள் நாம் இந்த பொருட்களை வாங்கி வைத்து குலதெய்வத்தையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபட்டோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வளமான வாழ்க்கையை வாழ முடியும்.

அந்த பொருட்கள் பச்சரிசி, வெல்லம், கல் உப்பு. வெல்லத்தை வாங்கி வைப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கை இனிமையான வாழ்க்கையாக மாறும் என்றும் கூறப்படுகிறது. பச்சரிசியை வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் அன்ன தரித்திரம் நீங்கி தானிய செழிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கல்லுப்பு என்பது மகாலட்சுமி தாயாரின் அம்சம் என்பதால் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு கல் உப்பு உதவுகிறது.

- Advertisement -

இப்படி இந்த நேரத்தில் வாங்கி வைக்க இயலாதவர்கள் அன்றைய தினம் 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் வரக்கூடிய குளிகை நேரத்திலும் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். இந்த பொருட்களை வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து மகாலட்சுமி தாயாருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு குலதெய்வத்தின் நாமத்தை 11, 21 என்ற எண்ணிக்கையில் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூறி மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெண் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பொருட்கள் நாமும் நம் இல்லத்தில் வாங்கி வைத்து குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -