- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

வயதை குறைத்து முக அழகை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்

- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்களுடைய வயது அதிகமாக தெரிவது போல் காட்டிக்கொள்ள மாட்டார்கள். முடிந்த அளவிற்கு குறைந்த வயதில் இருப்பது போல தான் காட்டிக் கொள்வார்கள். இளமையான வயதை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பல முயற்சிகளை செய்வார்கள். அப்படிப்பட்ட முயற்சிகள் இயற்கையான முறையில் இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு இயற்கையான ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வயதான தோற்றத்தை வெளிப்படையாக காட்டக்கூடிய காரணிகள் என்று பார்க்கும் பொழுது நம்முடைய முகமும் தலைமுடியும் தான். தலை முடியில் வெள்ளை முடி வருவதால் வயதான தோற்றம் என்பது ஏற்படும். அதேபோல் முகத்தில் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் அதிக அளவில் ஏற்பட்டாலும் வயது முதிர்ச்சியை அது வெளிப்படுத்தும். அப்படிப்பட்ட சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் நீக்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்குவதற்கு உதவக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் இருந்தால் போதும். இதை அவ்வப்பொழுது தயார் செய்து உபயோகப்படுத்தும் பொழுது அதன் பலன் மேலும் அதிகமாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சாதாரண பொருட்களாகவே திகழ்கிறது. அவை தான் கோதுமை மாவு, தயிர் மற்றும் கற்றாழை ஜெல்.

ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கற்றாழை ஜெல்லானது கடையிலிருந்தும் அப்படியே வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் இருக்கக்கூடிய இயற்கையான கற்றாழையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. நம்முடைய முகத்தை சுத்தம் செய்த பிறகு இதை எடுத்து நம்முடைய முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடலாம். இதில் இருக்கக்கூடிய கோதுமை மாவு நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய முகச்சுருக்கத்தை நீக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. மேலும் சூரிய ஒளிகதிர்களால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இது குறைக்கிறது.

இதில் சேர்க்கப்பட்டுள்ள தயிரும் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமையும் கரும்புள்ளிகளையும் நீக்கி முகத்தை பொலிவுடன் பிரகாசமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. கற்றாழையை பற்றி சொல்லவே வேண்டாம். இயற்கையிலேயே இருக்கக்கூடிய அற்புதமான ஒரு பொருளாக கற்றாழை திகழ்கிறது. கற்றாழையை நாம் பயன்படுத்தும் பொழுது முகப்பருக்கள் ஏற்படாமலும் கரும்புள்ளிகள் ஏற்படாமலும் முகத்தில் ஈரத்தன்மை தக்க வைத்துக் கொள்வதற்கும் இது உதவிகிறது. இந்த பேக்கை தினமும் நாம் நம்முடைய முகத்தில் தடவி வருவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்

இந்த கிரீமை பயன்படுத்தினால் ஐந்து வயது குறைந்துவிடும். அந்த கிரீமை பயன்படுத்தினால் பத்து வயது குறைந்துவிடும் என்று விளம்பரத்திற்காக கூறுபவர்களுக்கிடையே இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நம்முடைய சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -