- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகம் வெள்ளையாக மாற டிப்ஸ்

முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்

- Advertisement -

நாம் எல்லோருக்கும் வெள்ளையாக இருக்க வேண்டும், முகம் பொலிவாக இருக்க வேண்டும், கருமை புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று ஆக வேண்டும் என்று பல கனவுகள் இருக்கும். பலருக்கு இயற்கையாகவே கடவுள் அதை கொடுத்திருப்பார். இன்னும் சிலருக்கு அதனை கொடுத்து இருப்பார் ஆனால் பாதியிலேயே அது போய்விடும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகம் வெள்ளையாக என்னவெல்லாம் செய்யலாம் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பலரும் அழகான சருமத்தை பெற வேண்டும் என்பதற்காக பார்லர் சென்று காசு கொடுத்து கிளன்சிங், ஸ்க்ரப்பிங், ஃபேஷியல் என்று நூற்றுக்கணக்கில் செலவு செய்வார்கள். அப்படி நூற்றுக்கணக்கில் செலவு செய்ய முடியாத பெண்களுக்கு வீட்டிலேயே பார்லர் லுக் கொடுக்கும் எளிமையான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

வைட்னிங் பேக் அப்ளை பண்ணுவதற்கு முன்பாக ஸ்க்ரப்பிங் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று பார்ப்போம். இரண்டு டேபிள் ஸ்பூன் சக்கரை எடுத்துக் கொண்டு அதனை மிக்சியில் போட்டு நன்றாக தூளாக்க வேண்டும். அடுத்ததாக இரண்டு டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸை கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு டேபிள் ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றினையும் நன்றாக கலந்து கொண்டு பின்னர் அதனை முகத்தில் போட்டு நன்றாக தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். கிளாக் வைஸ் ஆன்ட்டி கிளாக் வைஸ் என்று மாறி மாறி பத்து முறை ஸ்கிராப் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி விடும். இந்த ஸ்கிப்பை முழு உடலுக்கும் உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

அடுத்ததாக முழு உடம்பையும் வெள்ளையாக்கும் பேக் பற்றி தான் பார்க்கப் போகின்றோம். ஆரஞ்சு பழ தோலை நன்றாக உரித்து அந்தத் தோலினை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொண்ட ஆரஞ்சு பழ தோலினை சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்திருந்த பேஸ்டில் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் கலந்த வைத்திருந்த அனைத்தையும் நன்றாக பசும்பால் கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்ய வேண்டும். இதை உடல் முழுவதும் தடவி ஐந்து நிமிடம் சாதாரணமாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்த ஐந்து நிமிடம் மிதமான சூடுள்ள சுடுதண்ணியை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் குளித்துவிட்டு வந்து விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்யும் பொழுது பார்லர் போகாமலேயே உடல் முழுவதும் வெண்மை நிறமாக மாறுவதை நம்மால் காண முடியும்.

இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் மங்கு மறைய ஃபேஸ் பேக்

காசு கொடுத்து நேரத்தையும் செலவு செய்து இப்படி பியூட்டி பார்லருக்கு சென்று தங்களை அழகாக்கி கொள்வதற்கு பதிலாக வீட்டிலேயே கிடைக்கக்கூடிய இயற்கையான பொருட்களை வைத்து தங்களுடைய நிறத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்