- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

60 வயதானாலும் 30 வயது போல் என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் இந்த முக சீரத்தை உபயோகித்தாலே போதும். யாராலும் உங்களுடைய உண்மையான வயதை கண்டுபிடிக்கவே முடியாது.

- Advertisement -

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆண்களும், பெண்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக அவர்கள் வயதைக் காட்டிலும் அதிக வயதுடையவர்களாக தோற்றம் அளிக்கும் பொழுது மன வேதனைப்படுவார்கள். பொதுவாக 40 வயதை நெருங்கும் பொழுதே முகத்தில் சில முதிர்ச்சி தன்மைகள் தோன்றிவிடும். அவை அனைத்தையும் சரி செய்து என்றும் இளமையாக இருப்பதற்கு நம் முகத்திற்கு ஒரு சீரம் தயார் செய்து உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா? அந்த சீரத்தை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

80 வயதான முதியவரை பார்த்து இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே என்று கேட்டவுடன் அவர்கள் முகத்தில் ஒருவித மகிழ்ச்சியும், புன்னகையும் ஏற்படும். இது 80 வயதை கடந்தவருக்கு மட்டுமல்ல 30 வயதை உடையவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். ஆனால் இந்த காலத்தில் நம் வயதை தாண்டி நம் முகத்தில் முதிர்ச்சி விரைவிலேயே ஏற்பட்டு சிறிய வயதில் முதிர்ந்த வயதினரை போல் முகம் மாறி விடுகிறது. இதற்கு நாம் நம் முகத்தில் உபயோகிக்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களோ அல்லது கெமிக்கல் நிறைந்த சோப்புகளோ தான் காரணம் என்றாலும் மற்றொரு புறம் நம்முடைய மன ஆரோக்கியமும் இதற்கு ஒரு காரணமாக திகழ்கிறது.

- Advertisement -

மனம் எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாமும் இளமையாக இருப்போம். மேலும் கவலை கொள்ளாமல் இருப்பவர்களுக்கு வயதாவது இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது நம் முகத்திற்கு தேவையான இளமையை தரக்கூடிய முக சீரத்தை எப்படி செய்வது என்ற பார்ப்போம்.

முக சீரம்:
இந்த முகசீரம் தயாரிப்பதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும். வெள்ளரிக்காய், கற்றாழை மற்றும் கொத்தமல்லி இலைகள். முதலில் ஒரு வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் மஞ்சள் திரவியம் அனைத்தும் வெளியேறிய பிறகு அதை சுத்தமாக கழுவி விட்டு அதற்குள் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவிற்கு வேர் நீக்கப்பட்ட தண்டுடன் இருக்கக்கூடிய கொத்தமல்லி தலையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பிறகு ஒரு மெல்லிய துணியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்‌. இதை தயார் செய்த உடனேயே குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து விட வேண்டும். வெளியில் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அந்த அளவுக்கு விரைவிலேயே கெட்டுப் போய்விடும்.

இந்த சீரத்தில் இருக்கும் மூன்று பொருட்களுக்கும் வயது முதிர்ச்சியை தடுக்கக்கூடிய பண்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் முகத்தில் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளான முகப்பரு, கரும்புள்ளி, வடுக்கள் போன்றவற்றையும் சரி செய்வதற்குரிய அற்புத பண்புகள் இவற்றிற்கு இருக்கின்றன.

இதையும் படிக்கலாமே: முடி நீளமாக வளர்க்க வேண்டும் என ஆசையாக உள்ளதா? உடனே தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை சேர்த்து தேய்த்து வாருங்கள். அப்பறம் என்ன உங்க முடி வளர்ச்சியை பார்த்து ஊரே கண்ணு வைக்கும்.

இதை தினமும் இரவில் முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் முகம் என்றுமே இளமையாகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

- Advertisement -