- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி நீளமாக வளர்க்க வேண்டும் என ஆசையாக உள்ளதா? உடனே தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை...

முடி நீளமாக வளர்க்க வேண்டும் என ஆசையாக உள்ளதா? உடனே தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை சேர்த்து தேய்த்து வாருங்கள். அப்பறம் என்ன உங்க முடி வளர்ச்சியை பார்த்து ஊரே கண்ணு வைக்கும்.

- Advertisement -

முடி வளர்க்க விருப்பமே இல்லாத பெண்கள் கூட நல்ல நீளமாக கருகருவென்று முடி வைத்திருக்கும் பெண்களைப் பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளப்பதுடன், நமக்கும் இப்படி முடி இருந்தால் எப்படி இருக்கும் என நிச்சயமாக யோசிப்பார்கள். அப்படியான முடி வளர்ச்சி தங்களுக்கும் கிடைக்கும் என்றால் நிச்சயம் அனைவருமே முடி வளர்க்கவே விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் முடி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளராது. இனி இது போன்ற பிரச்சனைகளை பற்றி சிந்தித்து கொண்டு இருக்காமல் இந்த எண்ணையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முடி உங்களை விட இரு மடங்கு வளர்வது உறுதி.

முடி நீளமாக வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் முடியை நன்றாக பராமரிக்க வேண்டும். இதற்காக நாம் அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தலையை எப்போதும் அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல் தலையில் பேன் பொடுகு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் இரும்பு சத்து மிக்க உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னஸதான் நாம் மேல் பூச்சாக எண்ணெய் தயாரித்து பூசினாலும் முடியை உள்ளிருந்தே வலுவாக வளர வைக்கக் கூடிய உணவுகளை கட்டாயமாக நாம் உண்ண வேண்டும்.

- Advertisement -

முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை
இந்த எண்ணெய் தயாரிக்க 250 கிராம் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து மீடியம் சைஸில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.. இதே போல் பத்து பல் பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கற்றாழை மடலை எடுத்து அதை நறுக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் இரும்பு கடாய் வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக முடி வளர்ச்சிக்கு தேவையான எந்த ஒரு எண்ணெய் தயாரிப்பதாக இருந்தாலும் அதற்கு இரும்பு கடாய் பயன்படுத்துவதே சிறந்தது. இதில் தேங்காய் எண்ணெய் ஊற்றிய பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, கற்றாழை அனைத்தையும் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து பத்து நிமிடம் கொதிக்க விட்டால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இதை அப்படியே ஆற விடுங்கள். இதை முடிந்தால் இரவு முழுவதும் கூட அப்படியே விட்டு விடலாம். இன்னுமே கூட இதன் சாறுகள் நன்றாக இறங்கி விடும்.

- Advertisement -

இந்த எண்ணெய் நன்றாக சூடு ஆறய பிறகு வடிகட்டியில் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் உங்கள் முடிகளின் வேர் கால்களில் படும் படி காட்டன் பஞ்சு வைத்து ஒற்றியும் எடுக்கலாம் அல்லது சீரம் போல பயன்படுத்தியும் வரலாம். இந்த எண்ணையை நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் எண்ணை போல தொடர்ந்து அப்படியே தலையில் வைத்திருக்கலாம். அப்படி தேய்க்க விருப்பம் இல்லாதவர்கள் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடுங்கள். இந்த எண்ணையை தேய்க்கும் போது நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. இந்த எண்ணை உங்கள் வேர்க்கால்களில் சிறிது நேரம் இருந்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்தே நிமிடத்தில் பர்மனென்ட்டாக வெள்ளையாக மாற, இதை விட ஈசியான ஐடியாவை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. உங்க கலருக்கு முன்னாடி வெள்ளைக்காரன் கலர், தோற்றுப் போகும்னா பாருங்க.

இதில் முடி வளர்ச்சிக்கு தேவையான வெங்காயம், முடி மென்மையாக கற்றாழை, இருப்பதுடன் தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவற்றையெல்லாம் இங்கு பூண்டில் உள்ள காரத்தன்மை அழித்து விடும். அது மட்டும் இன்றி தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து புதிய முடிகளையும் இந்த எண்ணையை வளர வைக்கும். இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் இதை தயாரித்து வைத்துக் கொண்டு உங்களின் முடி வளர்ச்சி அபாரமாக பெருக்கிக் கொள்ளுங்கள்.

சற்று முன்