- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

நிறத்தை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் க்ரீம்

- Advertisement -

இன்றளவும் பல இடங்களில் நிறத்தை வைத்து மனிதர்களை எடைபோடும் தன்மை இருக்கிறது. அதனால் தான் கருமையாக இருக்கும் நபர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையால் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்களின் மனநிலையை மாற்றி தங்களின் உண்மையான திறமையை வெளிப்படையாக காட்ட வேண்டும். அதையும் மீறி இந்த கருமை நிறத்தால் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்காக வீட்டிலேயே எளிமையான முறையில் ஒரு ஃபேஸ் க்ரீமை தயார் செய்து பயன்படுத்தினால் ஏலே நாட்களில் நல்ல பலனை பார்க்க முடியும். இந்த எளிமையான ஃபேஸ் க்ரீமை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்முடைய சருமத்திற்கு தேவையான சத்தாக திகழ்வதுதான் விட்டமின் இ மற்றும் சி. இந்த இரண்டு சத்துக்களும் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய சத்துக்களாக திகழ்கின்றன. இதில் விட்டமின் சி என்பது சிட்ரிக் பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக எலுமிச்சை, ஆரஞ்சு பழம் போன்ற பழங்களில் இந்த விட்டமின் சி சத்து அதிக அளவில் இருக்கிறது. ஆரஞ்சு பழத்தை நாம் அன்றாடம் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது அது இயற்கையாகவே நம்முடைய நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

- Advertisement -

இதில் மட்டுமல்லாமல் இந்த சத்து பப்பாளி பழத்திலும் நிறைந்திருப்பதால் பப்பாளி பழத்தையும் நாம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். சரி இப்படி விட்டமின் சி அதிகம் இருக்கக்கூடிய ஆரஞ்சு பழத்தை வைத்து நாம் ஒரு ஃபேஸ் க்ரீம் தயார் செய்து பயன்படுத்தினால் அதன் பலனை நாம் இன்னும் விரைவிலேயே பெற முடியும்.

இதற்கு ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை உரித்து அதற்குள் இருக்கும் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறை ஒரு பவுலில் மாற்றிவிட்டு அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு கிளிசரின் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதற்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளையும் நாம் அதில் சேர்த்து நன்றாக கலந்த பிறகு தான் அடுத்த பொருளை சேர்க்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலந்த இந்த விழுதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்து விட வேண்டும்.

மூன்று மணி நேரம் கழித்து இந்த டப்பாவை எடுக்கும் பொழுது க்ரீம் பதத்திற்கு வந்து விடும். இந்த க்ரீமை நாம் இரவு படுக்க செல்வதற்கு முன் முகம், கழுத்து போன்ற பகுதிகளில் நன்றாக தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அப்படியே சென்ற படுத்து விடலாம். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்தாலே நம்முடைய நிறத்தில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: மேனி முழுவதும் ஜொலிக்க குளியல் பொடி தயார் செய்யும் முறை

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம்முடைய வீட்டிலேயே ஃபேஸ் க்ரீம் தயார் செய்து உபயோகப்படுத்தி நம்முடைய நிறத்தை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -