மேனி முழுவதும் ஜொலிக்க குளியல் பொடி தயார் செய்யும் முறை

bathing powder
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் முகத்தை பராமரித்துக்கொள்ள எண்ணற்ற கெமிக்கல் கலந்த கிரீம்களும் அழகு நிலையங்களும் பெருகி வருகின்றன. அதற்கே பெருமளவு பணத்தையும் செலவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் முழு உடம்பையும் பாதுகாத்து நல்ல பளபளப்புடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அது கொஞ்சம் சிரமமான காரியம் தான். இப்படித் தான் பலரும் யோசிக்கிறார்கள்.

ஆனால் இந்த இயற்கை நமக்கு பல வரப் பிரசாதங்களை தந்திருக்கிறது. அதை சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் நம் முழு உடலையும் எப்போதுமே தங்கம் போல ஜொலிக்க வைக்கலாம். இதை கேட்கும் பொழுது இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றலாம். இந்த ஒரு பொடியை அரைத்து தினமும் பயன்படுத்தி வந்தால் நிச்சயம் இது சாத்தியம்தான். வாங்க அந்த குளியல் பொடி எப்படி தயாரிப்பது என்று அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குளியல் பொடி தயாரிக்கும் முறை
இந்தக் குளியல் பொடி தயாரிக்க விரலி மஞ்சள் 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் 100 கிராம் ரோஜா இதழ் 50 கிராம் ஆவாரம் பூ 50 கிராம் வசம்பு 50 கிராம் கோரைக்கிழங்கு 50 கிராம் பூலாங்கிழங்கு 50 கிராம் இவை அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ரோஜா இதழ் ஆவாரம் பூ இவையெல்லாம் இயற்கையானதாக கிடைத்தால் வாங்கி காய வைத்து பயன்படுத்துங்கள்.

இந்த பொருட்களில் கிழங்கு வகைகள் அனைத்தையும் மூன்று நாட்கள் நல்ல வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள் ரோஜா இதழையும், ஆவாரம் பூவையும் இயற்கையானதாக நீங்கள் பயன்படுத்தினால் இரண்டு நாட்கள் மட்டும் நிழலில் ஆற வையுங்கள். பொடியாக வாங்கினால் காய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காய வைத்த கிழங்குகளை சின்ன சின்னதாக உடைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த பொடியும் சேர்த்து மிக்ஸி ஜாரில் நல்ல பவுடராக அரைத்து சலித்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் முழு உடம்பையும் ஜொலிக்க வைக்க கூடிய குளியல் பொடி தயாராகி விட்டது.

- Advertisement -

இந்தப் பொடியை நீங்கள் பயன்படுத்தி குளித்து வந்தாலே போதும். சருமத்தில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சனைகளும் சரியாவதுடன் ஆங்காங்கே தோன்றும் கருத்திட்டுகள் மறைந்து விடும். முகச்சுருக்கங்கள் நீங்கும். முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும். முகம் நல்ல பொலிவுடன் பார்க்க பளிச்சென்று இருக்கும். இந்தப் பொடியை பயன்படுத்தும் போது எந்தவித கெமிக்கல் கலந்த கிரீமையும் சோப்பையும் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் கெமிக்கலும் இந்த இயற்கையான பொருட்களும் சேரும் போது நிச்சயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது இந்த இயற்கை யான பொருட்கள் உள்ள தன்மைகளை அது அழித்து விடும். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம். மஞ்சள் சேர்த்து இருப்பதால் ஆண்கள் இதை தவிர்க்கலாம் ஆண்கள் பயன்படுத்த நினைத்தால் மஞ்சளை தவிர்த்து விட்டு மற்றவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இளமை பொலிவைத் தரும் கிரீம்

இயற்கையான முறையில் நம்மை அழகுப்படுத்திக் கொள்ள எத்தனையோ பொருட்கள் இருக்கும்பொழுது கொஞ்சம் சிரமப்பட்டு இவற்றையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டாலே போதும். எப்பொழுதும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். அது மட்டும் இன்றி பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குளியல் பொடி தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை பயன்படுத்துங்கள்.

- Advertisement -