
சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த மலாய் மெத்தி பட்டாணி கிரேவி நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான கிரேவி போல இல்லாமல் நல்ல ஒரு கிரிமீ பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். அந்த ரெசிபியை ரொம்ப சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கிரேவி செய்வதற்கு முதலில் அடுப்பில் பேன் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 1 பட்டை, 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு, சேர்த்து பொரிந்த பிறகு 10 பல் உரித்த பூண்டு, 1துண்டு இஞ்சி நறுக்கியது, 10 முழு முந்திரி, 6 பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
இவையெல்லாம் ஒரு முறை வதங்கிய பிறகு 3 பெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் இஞ்சி பூண்டு இவையெல்லாம் வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு நன்றாக ஆறிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக மீண்டும் அடுப்பில் பேன் வைத்து சூடானதும் 1 ஸ்பூன் பட்டர் சேர்த்து 1 கைப்பிடி அளவு வெந்தய கீரையை சுத்தம் செய்த பிறகு சேர்த்து லேசாக வதக்குங்கள். இந்த வெந்தயக் கீரையை வதக்காமல் செய்தால் கிரேவி கசப்பாக மாறி விடும் எனவே வெந்தயக்கீரை வதக்குவது மிகவும் முக்கியம். இத்துடன் ஒரு கப் அளவு பச்சை பட்டாணி வேக வைத்து பின் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் காய்ந்த பட்டாணயை ஊற வைத்து சேர்க்கக் கூடாது. இவை இரண்டும் வதங்கிய பிறகு இதையும் தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பேன் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடான பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு வதக்கி வைத்த வெந்திய கீரையும் பச்சை பட்டாணியும் சேர்த்துப் பிறகு 1ஸ்பூன் உப்பு சேர்த்து கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி பிறகு மூடி போட்டு இதை நன்றாக ஒரு முறை கொதிக்க விடுங்கள்.
இவையெல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்த பின்பு அரைக்கப் பிரஷ் கிரீம் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள். இந்த பிரஷ் கிரீம் இதில் சேர்த்தால் தான் நல்ல ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ட ரீச் ஆக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: ஹோட்டல் வெஜிடபிள் குருமா ருசிக்க இந்த காய் தான் காரணமா? இப்படி கூடவா வெஜிடபிள் குருமா வைப்பாங்க? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!
இதை கடைசியாக இறக்கும் முன்பு கொஞ்சமாக கஸ்தூரி மேத்தியை கைகளில் கசக்கி அதில் சேர்த்துப் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல சுவையான ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் சூப்பரான மலாய் மேத்தி பட்டாணி கிரேவி தயார். இந்த கிரேவியை நாம் எப்போதும் செய்வது போல இல்லாமல் ரொம்பவே வித்தியாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு எல்லாம் இதன் சுவை ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.