- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஹோட்டல் வெஜிடபிள் குருமா ருசிக்க இந்த காய் தான் காரணமா? இப்படி கூடவா வெஜிடபிள் குருமா...

ஹோட்டல் வெஜிடபிள் குருமா ருசிக்க இந்த காய் தான் காரணமா? இப்படி கூடவா வெஜிடபிள் குருமா வைப்பாங்க? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

- Advertisement -

சொன்னா நம்ப மாட்டீங்க. ஹோட்டல்களில் வெஜிடபிள் குருமாவில் நூல்கோல் சேர்த்து நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹோட்டல் வெஜிடபிள் குருமா சுவையாக இருப்பதற்கு காரணம் இந்த சௌசௌ தான். சௌசௌ சேர்த்து வெஜிடபிள் குருமா செஞ்சு பாருங்க அதுவும் பின் சொல்லக்கூடிய ரெசிபியை அப்படியே ஃபாலோ பண்ணி வெஜிடபிள் குருமா வச்சா, ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா தோத்துவிடும். சௌசௌ உடன் இன்னொரு ரகசிய பொருளையும் இதில் நாம் சேர்க்கப் போகின்றோம். அது என்ன பொருள் என்று ரெசிபியை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு வெஜிடபிள் குருமா சுவை அப்படி அல்லும். உங்க வீட்டில் இருப்பவர்களின் அத்தனை பேருடைய நாக்கும் இந்த குருமாவுக்கு அடிமையாக விடும் வாங்க ரெசிபிகு உள்ள போவோம்.

செய்முறை

இந்த குருமாவுக்கு ஒரு ஸ்பெஷல் அரவை அரைக்க வேண்டும். முதலில் அதை பார்த்து விடுவோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 5 பல், பூண்டு தோல் உரித்தது – 2 பல், இஞ்சி – 1 இன்ச், சின்ன துண்டு பட்டை – 1, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, கசகசா – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், சோம்பு – 1/4 ஸ்பூன், மிளகு – 10, மல்லி இழை – ஒரே ஒரு இனுக்கு, புதினா இலை – 4, பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (புதினா, கொத்தமல்லி தழை ரொம்பவும் நிறைய சேர்க்கக்கூடாது. குருமா சுவை நிறம் மாறிடும்.)

- Advertisement -

அடுத்து மீடியம் சைஸில் இருக்கும் சௌசௌவை தோல் சீவி க்யூப் வடிவத்தில் அளவான சைஸில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை – 1, கல்பாசி – மிக குறைந்த அளவு, சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, நறுக்கிய வெங்காயம் – 1/2 கைப்பிடி அளவு, போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பிறகு மிகச் சின்ன தக்காளி பழம் – 1, போட்டு குருமாவுக்கு தேவையான அளவு – உப்பு போட்டு, தக்காளியை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அடுத்து வெட்டி வைத்திருக்கும் சௌவ்சௌவை போட்டு வதக்க வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம் இரண்டே நிமிடத்தில் சௌசௌவில் லேசாக தண்ணீர் விட்டு சௌசௌ வதங்கட்டும். இதோடு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், போட்டு 30 செகண்ட் வரை வதக்கி உடனடியாக மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அரவையை இதில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வதக்குங்கள்.

ஏனென்றால் அரவையை பச்சையாக தான் எல்லா பொருட்களையும் சேர்த்து அரைக்கிறோம். அந்த பச்சை வாடை எல்லாம் எண்ணெயில் வதங்கி போன பின்பு, குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீர் அதாவது 1 சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி இதோட, காய்ச்சிய பால் – 1/2 கப் ஊற்றி கலந்துவிட்டு இதன் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி, குக்கரை மூடி இரண்டே விசில் விட்டு குக்கரை திறந்து குருமாவை ருசித்துப் பாருங்கள். இதனுடைய ருசி உங்களுக்கு தெரியும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 5 நிமிடத்தில் இப்படி ஒரு ஆரோக்கியமான, ருசி தரும் போண்டாவை யாராலும் செய்ய முடியாது. சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி!

ஆமாங்க காய்ச்சிய பால் ஊற்றி வெஜிடபிள் குருமா செய்யும் போது சுவை சூப்பராக இருக்கும். அதிலும் இந்த சௌசௌ குருமா வேற லெவல் டேஸ்ல கிடைக்கும். அரவை அரைக்கும் போது எந்த பொருளையும் மிஸ் பண்ணாதீங்க. குறிப்பாக சின்ன வெங்காயம் போட்டு அரைத்து குருமா வைக்கும் போது இதனுடைய சுவை வேற லெவலில் இருக்கும். ரெசிபி முயற்சி செய்துதான் பாருங்களேன்.

சற்று முன்