
இந்த குருமாவை நாம் பல வகைகளில் செய்யலாம். சாதத்திற்கு ஒரு வகையாகவும், டிபன் வகைகளுக்கு ஒரு வகையான செய்யலாம். எப்படி செய்தாலுமே இந்த ஹோட்டல்களில் கிடைக்கும் அதே போன்று ருசி நமக்கு வீட்டில் கிடைப்பது இல்லை. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் ஹோட்டல் சரவண பவன் ஸ்டைலில் ஒரு சூப்பரான வெஜிடபிள் குருமா எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த குருமா செய்வதற்கு முதலில் சின்னதாக நறுக்கிய 1/4 கப் உருளைக்கிழங்கு, 1/4 கப் பீன்ஸ், 1/4 கப் கேரட் இத்துடன் 1/4 கப் பச்சை பட்டாணி இவை அனைத்தையும் குக்கரில் சேர்த்த பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரே ஒரு கப் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய் 8 முந்திரி 1 ஸ்பூன் கசகசா இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை அரைத்து பின்பு மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடான பிறகு 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு 2 லவங்கம், 2 ஏலக்காய், 1 துண்டு பட்டை, இவையெல்லாம் சேர்த்த பிறகு 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது இவை அனைத்தையும் சேர்த்த பிறகு வெங்காயம் ஓரளவு நிறம் மாறி வரும் வரை வதக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு பெரிய தக்காளி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தக்காளி நன்றாக குழைந்து வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், 11/2 ஸ்பூன் தனியா தூள் இவை இரண்டையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு குக்கரில் வேகவைத்த காய்களை இத்துடன் சேர்த்து அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இவையெல்லாம் நன்றாக கொதித்து பச்சை வாடை போன பின்பு 1/4 கப் நல்ல கெட்டியான அதிகம் புளிக்காத தயிரை சேர்த்து ஒரு முறை கொதிக்க விடுங்கள்.
இதையும் படிக்காலமே: எந்த காயும் இல்லாமல் எளிமையான மோர்க்குழம்பு நொடியில் தயார் செய்வது எப்படி? ஒரு கப் தயிர் இருந்தா போதும் லஞ்ச் ரெடி!
அதன் பிறகு 1/4 கப் காய்ச்சி ஆற வைத்த பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து கொதித்த பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். இதோ சூப்பரான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா தயார்.