எந்த காயும் இல்லாமல் எளிமையான மோர்க்குழம்பு நொடியில் தயார் செய்வது எப்படி? ஒரு கப் தயிர் இருந்தா போதும் லஞ்ச் ரெடி!

onion-mor-kulambu
- Advertisement -

ரொம்ப சுலபமாக வீட்டிலேயே எளிமையாக தயாரிக்க கூடிய ஒரு குழம்பு மோர் குழம்பு! ஒரு கப் தயிர் இருந்தாலே சட்டென்று செய்து அசத்தக் கூடிய இந்த மோர் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். நாவிற்கும், மனதிற்கும் இனிமையை கொடுக்கக் கூடிய இந்த மோர் குழம்பு ரெசிபி, சுவையாக ரொம்ப எளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், வர மிளகாய் – 2, துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, பெரிய வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

மோர் குழம்பு செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு தயிரை எடுத்து ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைஸ்சாக கட்டிகள் இல்லாமல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் விட்டு காய விடுங்கள். தேங்காய் எண்ணெய் சேர்க்கும் போது மோர் குழம்பு ருசி தனியாக டேஸ்டாக இருக்கும். பின்னர் அதில் தேவையான அளவிற்கு கடுகு தாளித்துக் கொள்ளுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கொஞ்சம் வெந்தயம் போட்டு, வெந்தயம் போட்ட உடனேயே ரெண்டு வர மிளகாயை காம்பு நீக்கி இரண்டாக கிள்ளி உடைத்து போடுங்கள்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மெல்லியதாக துருவிய இஞ்சி அல்லது பொடியாக நறுக்கிய இஞ்சியை சேருங்கள். இஞ்சி சேர்த்ததும் ரெண்டு பச்சை மிளகாயை கீறி போட்டு, ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் மெல்லியதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு நன்கு வதங்கி வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போனதும் அடுப்பை முற்றிலும் குறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
5 நிமிஷத்துல மஸ்ரூம்ல இப்படி ஒரு சூப்பரான ஃப்ரை செய்யலாம்ன்னு இது வரைக்கும் நீங்க கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீங்க. சப்பாத்தி, பரோட்டா வெரைட்டி ரைஸ் எல்லாத்துக்கும் செம்மையான ஒரு பெஸ்ட் சைடு டிஷ்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தயிரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு இடைவிடாமல் கலந்து விடுங்கள். லேசாக சூடு ஏறியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். மோர் குழம்பு அதிகம் கொதிக்க கூடாது. மோரை ஊற்றியதும் அடுப்பை குறைத்து விட வேண்டும். அப்போது தான் மோர் திரியாமல் நன்கு பொங்கி வரும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -