- Advertisement -

சாப்பிடும் பொழுது மறந்தும் செய்யக்கூடாதவை

- Advertisement -

உணவு உண்ணும் பொழுது இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு வரைமுறை உண்டு. அதன்படி சாப்பிடுபவர்களுக்கு ஆயுள் நீடிக்குமாம். ஆனால் கலியுகத்தில் அப்படி யாரும் சாப்பிடுவதில்லை, இதனால் மனிதனுடைய ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது. நம் முன்னோர்கள் எல்லாம் 80 வயது வரை திடகாத்திரமாக இருப்பார்கள். ஆனால் அது படிப்படியாக குறைந்து இப்பொழுது 50 வயதிலேயே நரை, திரை, மூப்பு அனைத்தும் வந்துவிடுகிறது. நீடித்த ஆயுளுக்கும், கை நிறைய பணம் தங்கவும் எப்படி சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

சாப்பிடும் பொழுது வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. கீழே ஏதாவது ஒன்றை விரித்து அதன் மீது அமர்ந்து தான் சாப்பிட வேண்டும், இது உடல் உஷ்ணத்தை சீர் செய்யும். உணவினை சாப்பிடும் முன்பு அந்த உணவினை தரக்கூடிய அன்னபூரணியை அல்லது உங்களுக்கு பிடித்த கடவுளை இந்த உணவு தந்ததற்கு நன்றி என்று அரை நிமிடம் வேண்டி விட்டு பின்னர் தான் சாப்பிட வேண்டும்.

- Advertisement -

நீங்கள் கைகளில் சாதத்தை அள்ளி சாப்பிட வேண்டும். கரண்டியை பயன்படுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களிடம் பணம் தங்குவதை தடை செய்கிறது. கரண்டியில் சாப்பிடுபவர்கள் தாராளமாக பணத்தை செலவு செய்வார்கள். இவர்களுக்கு சேமிப்பு திறன் குறையும். சாதத்தை சாப்பிடும் பொழுது உருட்டி சாப்பிடக்கூடாது. சாதத்தை உருட்டி வைப்பது தர்ப்பணம் கொடுக்கும் பொழுது செய்ய வேண்டியது. இறந்து போன நம் முன்னோர்களுக்கு பிண்டம் வைக்க இப்படி சாதம் உருட்டுவோம், எனவே உணவு சாப்பிடும் பொழுது இந்த செயலை செய்வது தவறு.

சாப்பிடும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிடக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். கடமைக்கு என்று சாப்பிடக்கூடாது உணவினை ரசித்து, ருசித்து, வாயில் வைத்து மென்று பின்பு தான் விழுங்க வேண்டும். அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உணவினை இப்படித்தான் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் நன்கு ஜீரணமாகும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

- Advertisement -

உணவு உண்ணும் பொழுது சரியான இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே சாப்பிடுவது, படுக்கையின் மீது அமர்ந்து சாப்பிடுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. குறிப்பாக இந்த தலைமுறை செய்யக்கூடிய இந்த தவறுகளை செய்யவே கூடாது. அது மொபைல் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவற்றை செய்வதால் நாம் என்ன சாப்பிடுகிறோம்? எதற்கு சாப்பிடுகிறோம்? என்பதே நமக்கு தெரியாது. சாப்பிடும் பொழுது என்ன சாப்பிடுகிறோம்? இதனால் நமக்கு என்ன சத்து கிடைக்கும்? உடல் எடை கூடுமா? குறையுமா? என்கிற ஆரோக்கிய தகவல்களைத் தெரிந்து சாப்பிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
6-2-2025 தை கிருத்திகை முருகன் வழிபாடு

வாய் கேட்கிறது என்று கண்டபடி சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் ஆயுள் குறையும். சாஸ்திர ரீதியாக உணவு உண்ணும் பொழுது பேசிக் கொண்டே சாப்பிடுபவர்களுக்கு மகாலட்சுமி சாபம் கொடுக்கிறாள். இவர்களுடைய கைகளில் பணம் சேரவே சேராது. எவ்வளவுதான் உழைத்தாலும், உழைத்த பணம் இவர்களிடம் தங்காது. எனவே உணவு உண்ணும் பொழுது மேற்கண்ட படி எந்த தவறையும் செய்யாமல் சாப்பிட்டு பாருங்கள் பணமும் சேரும், ஆயுளும் அதிகரிக்கும்.

- Advertisement -