ஜாதக கட்டத்தில் தோஷம். வெகு நாட்களாக முயற்சிகள் செய்தும் திருமணம் நடக்கவில்லை, என்பவர்களுக்கு தை கிருத்திகை ஒரு வரபிரசாதம். திருமணம் நடந்தும் குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்களுக்கும் தை கிருத்திகை ஒரு வரப் பிரசாதம். நிலம் வாங்க முடியவில்லை, வீடு வாங்க முடியவில்லை, வீட்டில் குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா.
உங்களுக்கும் வரக்கூடிய தை கிருத்திகை ஒரு வரப்பிரசாதம். உங்களுக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் சரி வரப்போகும் தை கிருத்திகை அன்று, முருகப் பெருமானை மனதார நினைத்து, வழிபாடு செய்தால், அந்த கஷ்டத்தை, முருகப்பெருமான் உடனடியாக தீர்த்து வைப்பான்.
இந்த தை கிருத்திகையில் நம்முடைய சங்கடங்கள் தீர வேண்டும் என்றால், முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்வது, மிக மிக எளிமையான பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்காக. தை கிருத்திகை அன்று வியாழக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து, சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். வியாழக்கிழமை அதிகாலை 3:21 மணி முதல் கிருத்திகை திதி இருக்கிறது.
ஆக வியாழக்கிழமை காலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் முருகன் கோவிலுக்கு சென்று, விளக்கு போட்டு வேண்டுதல் வைப்பது, மிக அற்புதமான பலனை தரும். முடிந்தவர்கள் இந்த நேரத்தை தவற விடாதீர்கள். மனது முழுவதும், முருகன் நிறைந்திருக்க வேண்டும். முருகன் கோவிலுக்கு சென்று முடிந்தால் 6 விளக்கு, முடியவில்லை என்றால் 2 விளக்கு ஏற்றி வைக்கவும்.
நல்லெண்ணெய் தீபம் ஏற்றினாலும் சரி, நெய் தீபம் ஏற்றினாலும் சரி, அது உங்கள் விருப்பம். முருகனுக்கு உங்கள் கைகளால் செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து விடுங்கள். “முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர்வேலா” என்று உங்களுடைய பிரார்த்தனையை முருகனிடம் வைத்து விடுங்கள். கோவிலை 6 முறை வலம் வர வேண்டும். “ஓம் சரவணபவ” மந்திரத்தை மட்டும் மனதில் நிறுத்தி, கோவிலை வலம் வந்து அந்த சன்னிதானத்தில் அமர்ந்து விட வேண்டும்.
உள்ளம் உருகி உங்களுக்கு தேவையானதை முருகனிடம் கேளுங்கள். 5 நிமிடம், 10 நிமிடம், 15 நிமிடம் அது உங்களுடைய விருப்பம். ஜாதக கட்டத்தில் தோஷத்தால் திருமண தடை இருந்தால் அல்லது தோஷத்தால் குழந்தை பிறக்காமல் இருந்தால், அதை எல்லாம் உங்கள் தாய் தந்தையரிடம் எப்படி சொல்லி முறையிடுவீர்கள், அதேபோல முருகனிடம் கஷ்டத்தை சொல்லி முறையிடுங்கள்.
வியாழக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்தால் ரொம்ப ரொம்ப பவர் அதிகம் பார்த்துக்கோங்க. நீங்கள் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எல்லோராலும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. இந்த நேரத்தை தவற விட்டவர்கள், நாளைய தினம் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் முருகனை வழிபாடு செய்யலாம். மாலை 6:30 முப்பது மணிக்கு மேல் முடியும் என்றாலும் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்யலாம்.
இது தவிர கிருத்திகை என்றாலே வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் முருகனது சிலை வைத்திருப்பவர்கள் எல்லாம் அந்த சிலைக்கு அபிஷேகம் செய்து, நெய்வேதியம் செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சில பேருக்கு வெற்றிலை தீபம் ஏற்றக்கூடிய வழக்கம் இருக்கும். உங்களுடைய வீட்டில் நீங்கள் தை கிருத்திகை வழிபாட்டை எப்படி மேற்கொள்வீர்களோ, அதை மேற்கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: 5-2-2025 வளர்பிறை அஷ்டமி திதி பைரவர் மந்திரம்
எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு ரூபத்தில் கை கிருத்திகை அன்று முருகனை வழிபட்டு விடுங்கள். தை கிருத்திகை அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்யாமல் இருக்கவே கூடாது. மேலே சொன்ன வழிபாடுகளை முழு நம்பிக்கையோடு செய்தால், பலன் நிச்சயம் உண்டு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.