- Advertisement -
சமையல் குறிப்புகள்

பத்தே நிமிடத்தில் சுவையான, சூப்பரன்னா வேக வைத்த வேர்க்கடலை தக்காளி சட்னி தயார்.

- Advertisement -

நாம் எப்போதும் உடைச்ச கடலை சட்னி வேர்க்கடலை சட்னி, தக்காளி சட்னி என்று ஒரே மாதிரியாக செய்து கொண்டு இருந்தால் பிள்ளைகளுக்கு வெறுத்துப் போய்விடும். வேர்க்கடலை சட்னிக்கு கூட வேர்க்கடலையை வறுத்து தான் அரைப்பார்கள். இது சிலருக்கு ஒத்துக்கொள்ளவும் செய்யாது. ஆனால் இந்த முறையில் பச்சை வேர்க்கடலையை அவித்து அரைப்பதால், உடலுக்கும் நல்லது. குழந்தைகள், பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறையில் நீங்கள் ஒரு முறை சட்னி அரைத்து தான் பாருங்களேன். சாப்பிட்டது போதும் எழுந்திருங்கள் என்று நீங்களே சொன்னாலும் உங்கள் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள்.

தேவையான பொருட்கள்: பச்சை வேர்கடலை (உரித்தது) – 1/4 கப், பச்சை மிளகாய் -3, காய்ந்த மிளகாய் – 6, தக்காளி – 3, புளி -சிறிய கொட்டை பாக்கு அளவு, உப்பு – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 3 பல், எண்ணெயை – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். இதில் எடுத்து வைத்துள்ள கால் கப் பச்சை வேர்க்கடலை, தக்காளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். தக்காளியில் மேல் தோல் வெந்து பிரிந்து வந்தால் போதும் (அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்) அதிகபட்சம் இரண்டு நிமிடம் ஆகும். இவை அனைத்தும் வெந்தவுடன் பொருட்கள் தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

பின் மிக்ஸி ஜாரில் இவைகளை சேர்த்து இத்துடன் பூண்டு, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியில் தண்ணீர் இருக்கும் எனவே தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வேண்டாம். (தண்ணீரில் வேகவைத்து செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த பொருட்களை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்த பின்னும் இப்படி அரைத்து சட்னி செய்து கொள்ளலாம்).

- Advertisement -

இப்போது தாளிப்புக்கு, அடுப்பில் ஒரு சின்ன கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் தாளிப்புக்கு இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு, கருவேப்பிலையும், சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு அந்த சூட்டிலேயே கால் சிட்டிகை பெருங்காயம் சேர்த்து, இந்த தாளிப்பை அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து விடுங்கள்.

நீங்கள் இதுவரை செய்திடாத புது வகையான வேக வேர்க்கடலை தக்காளி சட்னி தயார். இது போல வித விதமாகவும் அதே நேரம் ஆரோக்கியமாகவும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.

- Advertisement -