
ஆப்பம் மெத்தென்று கூடை போன்று பார்க்கும் போதே அழகாக இருந்தால் தான் சாப்பிடும் ஆசையே வரும். ஆப்பம் தோசை போல தட்டையாகவும், தடிமனாகவும் இருந்தால் சாப்பிட என்ன, பார்க்கவே கூட பிடிக்காது. ஆப்பத்திற்கு மாவு அரைக்காமல் மெத்தன்று கூடை போன்று அழகான ஆப்பம் அதுவும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம் என்றால் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விடுவீர்கள் அல்லவா. வாருங்கள் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதலில் ஒரு அரைமுடி அளவிற்கு தேங்காய் எடுத்து துருவி கொள்ளுங்கள். தேங்காயின் பின் புறம் இருக்கும் அந்த தோல் எல்லாம் நீக்கி துருவி கொள்ளுங்கள். அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தோல் இருந்தால் வெள்ளை நிறம் அல்லாமல் சற்று பிரவுன் நிறத்தில் இருக்கும். சிலருக்கு எப்படி இருந்தால் பிடிக்காது. அப்படி இருந்தால் உங்களுக்கு பரவாயில்லை என்றால் தோல் எடுக்க வேண்டாம். அப்படியே சேர்த்து அரைத்த பிறகு நன்றாக வடிகட்டி ஒரு அரை டம்ளர் அளவிற்கு கெட்டியாக முதல் பால் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் பால் மட்டும் போதும் இரண்டாவது மூன்றாவது பால் எல்லாம் தேவையில்லை.
இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் இட்லி மாவில் ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த மாவில் இந்த அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்து ஒரு பின்ச் சோடா உப்பு, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் இப்படி வைத்தால் போதும் உங்களுக்கு ஆப்பம் மாவு தயாராகி விட்டது.
பொதுவாக இட்லி மாவு எல்லோர் வீட்டிலும் எப்போதுமே இருக்கக் கூடிய ஒன்று. அப்படி இல்லை என்றாலும் கடைகளில் உடனடியாகவே அதை வாங்கிக் கொள்ளலாம். வாங்கி இப்படி தேங்காய் பாலை அரைத்து ஊற்றி பத்து நிமிடம் வைத்து எடுத்தால் போதும் சுவையான ஆப்பம் தயாரித்து விடலாம்.
இட்லி, இடியாப்பம், போன்றே இந்த ஆப்பம் கூட நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு தான். இதை செய்ய நேரம் ஆகும் என்பதிலே செய்ய கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் இப்படி பத்தே நிமிடத்தில் இந்த ஆபத்தை செய்து விடலாம் என்றால் நல்லது தானே.
இதையும் படிக்கலாமே: ஆரோக்கியம் நிறைந்த சுண்டல் தோசை எளிதாக எப்படி வீட்டில் தயார் செய்யலாம்? புரோட்டின் சத்து நிறைந்துள்ள கொண்டைக்கடலை தோசை இப்படியும் செஞ்சு ருசிச்சு பாருங்க!
இட்லி மாவில் தான் ஆப்பம் செய்தீர்கள் என்று நீங்கள் சொன்னால் ஒழிய யாரும் இதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு ஆப்பம் அதனுடைய தனி சுவையில் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க இனி ஆப்பம் செய்யறது எல்லாம் ஒரு வேலையை கிடையாது.