ஆரோக்கியம் நிறைந்த சுண்டல் தோசை எளிதாக எப்படி வீட்டில் தயார் செய்யலாம்? புரோட்டின் சத்து நிறைந்துள்ள கொண்டைக்கடலை தோசை இப்படியும் செஞ்சு ருசிச்சு பாருங்க!

- Advertisement -

எப்பொழுதும் ஒரே வகையாக அரிசி மற்றும் உளுந்தைக் கொண்டு மாவு தயாரிக்காமல், இப்படி ஒரு முறை தோசை மாவு செஞ்சு பாருங்க ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் அனைவரும் ரசித்து சுவைத்தும் சாப்பிடுவார்கள். புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ள கொண்டைக்கடலை வைத்து இப்படி ஒரு முறை நாம் வீட்டிலேயே எளிதான முறையில் தோசை சுட்டு பார்ப்போமா? சத்துள்ள சுண்டல் தோசை தயாரிப்பது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

சுண்டல் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டை கடலை – 2 கப், இட்லி அரிசி – இரண்டு கப், வெந்தயம் – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – ஐந்து, இஞ்சி – 2 இன்ச், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சுண்டல் தோசை செய்முறை விளக்கம்:
கொண்டைக்கடலை சுண்டல் தோசை செய்வதற்கு முதலில் வெள்ளை கொண்டை கடலை அல்லது கருப்பு கொண்டை கடலை உங்கள் விருப்பம் போல ஏதாவது ஒன்றை இரண்டு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ரெண்டு கப் அளவிற்கு இட்லி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கொண்டைக்கடலை நன்கு ஊறி வர தேவையான அளவிற்கு தாராளமாக தண்ணீர் சேர்த்து ஊறவிட்டு விடுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் ஊற விட்டால் மறுநாள் காலையில் இதை புளிக்க விட வேண்டும். பின்னர் அன்றைய இரவு தான் நீங்கள் தோசை அல்லது இட்லி சுட முடியும். காலையில் ஊற வைத்து இரவில் அரைத்து பின்னர் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையிலும் நீங்கள் இட்லி அல்லது தோசை வார்க்கலாம்.

- Advertisement -

இரவு முழுவதும் ஊற வைத்த பின்பு மறுநாள் காலையில் ஊறிய பொருட்களை மிக்ஸி அல்லது கிரைண்டரில் உங்கள் வசதிக்கு ஏற்ப போட்டு கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் காரத்திற்கு பச்சை மிளகாய், சுவைக்கு இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை மேற்கூறிய அளவின் படி சேர்க்க வேண்டும். பின்னர் இட்லி மாவு போல நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஹைதராபாத் ஸ்டைல் வண்டி கடை சட்னி டேஸ்ட்டியாக 5 நிமிடத்தில் எப்படி தயாரிக்கலாம்?

எப்பொழுதும் இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது தூள் உப்பை பயன்படுத்துவதை காட்டிலும் கல் உப்பை போட்டு கைகளால் நன்கு கரைக்கும் பொழுது மாவு சீக்கிரம் புளிக்கும். கரைத்து வைத்ததும் அது பொங்கும் அளவிற்கு பெரிய பாத்திரமாக இருக்கிறதா? என்பதை கவனியுங்கள். பிறகு நாள் முழுவதும் அப்படியே புளிக்க விட்டு விடுங்கள். பின்னர் இரவில் நீங்கள் டிபன் தயாரிக்க ஆரம்பிக்கும் பொழுது எடுத்து பார்த்தால் நன்கு நுரைக்க பொங்கி இருக்கும். பின்னர் இதை நன்கு ஒரு முறை கலந்து விடுங்கள். அவ்வளவு தான், இப்பொழுது நீங்கள் இட்லி, தோசை எது வேண்டுமானாலும் இதில் தயாரித்தால் ஆரோக்கியம் நிறைந்த புரோட்டின் சத்துள்ள சூப்பரான டேஸ்டியான மொறுமொறு சுண்டல் தோசை ரெசிபி ரெடி!

- Advertisement -