- Advertisement -
சமையல் குறிப்புகள்

தித்திப்பான ஜாங்கிரி செய்வது எப்படி

இனிப்பு என்றாலே எல்லோருக்கும் விருப்பம் தான். கடைகளில் பலவகையான இனிப்புகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் விரும்பி, வாங்கி சுவைப்பது ஜாங்கிரியை தான். ருசியான ஜாங்கிரியை வீட்டிலேயே தயாரிக்கும் முறையை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 3 கோப்பை
அரிசி – 1 தேக்கரண்டி
மாவு புட் கலர் (உணவு நிறமி) – 1 சிட்டிகை
சர்க்கரை – 3 கோப்பை
ஏலக்காய் – 3
எண்ணெய் – தேவையான அளவு

- Advertisement -

பொருட்கள் தயாரிக்கும் நேரம்: 2 மணி நேரம்
சமைக்கும் நேரம்: 30 லிருந்து 45 நிமிடங்கள் வரை
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 4

ஜாங்கிரி செய்யும் முறை

1 லிருந்து 2 மணி நேரம் வரை உளுத்தம் பருப்புகளை நீரில் ஊறவைத்து, அதன் மீது இருக்கும் தோல்களை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஏலக்காய்களையும், சர்க்கரையையும் ஒன்றாக கலந்து நன்கு அரைத்து அடுப்பில் நெருப்பு மூட்டி, அதில் ஒரு வாணலியை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும்.

இப்போது தோல் நீக்கப்பட்ட உளுத்தம்பருப்புகளை, அதிகம் நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்த துணியில் இந்த மாவு கலவையை கொட்டி, முடிந்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் காய வைக்க வேண்டும். எண்ணையை அதிக சூட்டில் கொதிக்க வைத்து, அதில் ஜாங்கிரியை பிழிந்தால் ஜாங்கிரி சரியான பக்குவத்தில் வராது.

இப்போது முடிந்து வைத்திருக்கும் அந்த துணியில் இருக்கும் மாவை, வாணலியில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெயில் மெதுவாக முதலில் ஒரு வட்டமாகவும், பிறகு அதன் மீது வட்ட, வட்டமாக மாவை பிழிய வேண்டும்.

அதிக மொறுமொறுப்பாக ஜாங்கிரியை பொறிக்க விடாமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சப்பட்ட சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி தயார்.

இதையும் படிக்கலாமே:
மொறு மொறு காராசேவ் செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Jangiri sweet recipe in Tamil or Jangiri recipe in Tamil. It can be also called as Jangiri seivadhu eppadi or Jangiri seimurai in Tamil. Jangiri sweet seimurai is explained clearly in Tamil here with step by step procedure.

- Advertisement -