
ஒரே ஒரு ஃபேஸ் பேக் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்க வேண்டும். அதே சமயம் நம்முடைய சருமம் மேலும் அழகாகவும், நிறம் மேலும் மேம்படவும் வேண்டும் என்றுதான் நாம் அனைவருமே ஆசைப்படுவோம். அந்த வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஃபேஸ்பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
ஜப்பானிய நாட்டை சேர்ந்த பெண்கள் எப்பொழுதும் இளமையாகவும் அழகாகவும் திகழ்வார்கள். அவர்களுடைய சருமம் பளிங்கு போன்று வழுவழுப்பாக முகத்தில் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் அழகாக இருக்கும். இதற்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் பேக் தான் முக்கியமான காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட ஃபேஸ் பேக்கை நாமும் நம்முடைய வீட்டில் தயார் செய்து பயன்படுத்தும் பொழுது நாமும் அவர்களுக்கு இணையான முக அழகை பெற முடியும். அந்த ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்க்க வேண்டும். அதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிரை சேர்த்து வாசனைக்காக மல்லிகை எண்ணெய் இரண்டு சொட்டு சேர்க்க வேண்டும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் இதை அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு சிறிது சிறிதாக தண்ணீரைத் தொட்டு தொட்டு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து அந்த ஃபேஸ் பேக்கை நீக்க வேண்டும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள அரிசி மாவு நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்து செல்களை நீக்குவதோடு நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளையும் நீக்கி சரும நிறத்தை மேம்படுத்த உதவும். இதில் நாம் சேர்த்துள்ள கஸ்தூரி மஞ்சள் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் இதில் நாம் தயிரை சேர்க்கிறோம். தயிர் என்பது நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய பாதிப்படைந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர்வதற்கு உதவி புரியும்.
இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நம் சருமத்தில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். முக்கியமாக பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள், வடுக்கள், முகச்சுருக்கம் போன்றவை அனைத்தும் நீங்கி இளமையான அழகான பொழிவான சருமத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:கருமையான முடியை பெற உதவும் எண்ணெய்
நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய இந்த எளிமையான பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் மிகவும் எளிதில் நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் நீக்க முடியும். பொலிவான அழகான சருமத்தையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.