நம்முடைய முன்னோர்கள் காலத்தில் வயதின் முதிர்ச்சி காரணமாக தான் அனைவருக்கும் நரைமுடி என்பதே உருவாகும். ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயதை சேர்ந்தவர்கள் பலருக்கும் நரைமுடி பிரச்சனை என்பது இருக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ மாணவிர்க்கு கூட இன்றைய காலத்தில் நரைமுடி பிரச்சனை என்பது இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஒரு எளிமையான எண்ணையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நரைமுடி ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. சத்து குறைபாடு, மெலனின் உற்பத்தி குறைவாக இருப்பது, வயது முதிர்ச்சி காரணமாக நரைமுடி ஏற்படுவது, அதிக அளவில் மன அழுத்தத்தாலும் நரைமுடி பிரச்சினை என்பது ஏற்படும், மேலும் உடலில் பித்தத்தின் அளவு என்பது அதிகரிக்கும் பொழுதும் நரைமுடி பிரச்சினை என்பது உண்டாகும். இவை அனைத்தையும் சரி செய்வதோடு நாம் நம்முடைய தலைமுடியை சரியாக பராமரித்தோம் என்றால் நரைமுடி பிரச்சனையில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.
இந்த எண்ணையை தயார் செய்வதற்கு நமக்கு சில பொடிகள் தேவைப்படும். ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் பொடியை வைக்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கருவேப்பிலை பொடியை வைக்க வேண்டும். பிறகு மருதாணி பொடி ஒரு ஸ்பூன், காப்பித்தூள் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் என்று இவை அனைத்தையும் வைத்துவிட்டு இதில் 200ml நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இதை குறைந்த தீயில் அடுப்பில் வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் சூடாக வேண்டும். இது நன்றாக சூடேறி அந்த எண்ணையின் நிறம் கருமையாக மாறும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு முழுமையாக ஆற வைத்து விட வேண்டும்.
எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். என்றைக்கெல்லாம் தலைக்கு குளிக்கிறோமோ அதற்கு முதல் நாள் இரவு இந்த எண்ணெயை தங்களுடைய தலையில் நன்றாக தடவி விரல்களை வைத்து மசாஜ் செய்து இரவு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விடலாம். இரவில் தலைக்கு எண்ணெய் வைப்பது சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள், தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயை தலையில் தடவி ஊறவைத்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் செய்யும்பொழுது விரைவிலேயே நரை முடி பிரச்சனை என்பது படிப்படியாக குறைய ஆரம்பித்து கருமை நிறத்தை பெறும்.
இதையும் படிக்கலாமே:ஆரோக்கியமான தலைமுடியை பெற
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நாம் எண்ணெய் தயார் செய்து வைப்பதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நம்முடைய நரைமுடியை கருமையாக மாற்ற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.