- Advertisement -
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய தேவைக்கு போதுமான அளவு பணவரவு ஏற்படாதது மட்டுமே. சிலர் வீண்விரயம் செய்து அதனால் கடன் அடைவார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்கள் நினைத்தால் மட்டுமே அந்த கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் கஷ்டப்பட்டு உழைப்பார்கள், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் இருக்கும். அப்படியே பணத்தை சம்பாதித்தாலும் அது மருத்துவ செலவிற்காகவோ வீண் விரயத்திற்காகவோ ஏதாவது ஒரு வகையில் செலவாகி கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பணவரவை அதிகரித்துக் கொள்வதற்கும் வீண் விரயங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் செய்ய வேண்டிய ஒரு மகாலட்சுமி பூஜையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் இல்லாத வாழ்க்கை வாழ வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமி தாயாருக்கு உரியக்கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை என்பதும், மகாலட்சுமிக்குரிய நேரமாக திகழ்வது சுக்கிர ஹோரை என்பதும் பலரும் அறிந்த உண்மை. அதனால் தான் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் பணவரவு அதிகரிக்கும் என்று பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு போதுமான அளவு பணவரவு ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய ஒரு மகாலட்சுமி பூஜையை பற்றி நான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த மகாலட்சுமி பூஜைக்கு நமக்கு தாமரை விளக்கு வேண்டும். இது அனைத்து கடைகளிலும் கிடைக்கும். தாமரை விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த தாமரை விளக்கோடு ஐந்து வெண்தாமரை மலர்களை வாங்கிக் கொள்ளுங்கள். வெண் தாமரை கிடைக்கவில்லை என்றால் சாதாரண தாமரை மலரை கூட வாங்கிக் கொள்ளலாம். மகாலஷ்மி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக இந்த ஐந்து தாமரை மலர்களையும் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு முன்பாக தாமரை விளக்கில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும். அம்பாளுக்கு வெண் பொங்கலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு தாழம்பூ குங்குமத்தை வைத்து மகாலட்சுமியின் இந்த மந்திரத்தை 54 முறை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் நமோ மஹாலட்சுமியே போற்றி ஓம்

இப்படியே அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை தனியாக எடுத்து ஐந்து பாகங்களாக பிரித்து சுமங்கலி பெண்கள் ஐந்து நபர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் செய்ய வேண்டும். நான்காவது வாரம் இந்த வெண் தாமரையுடன் 21 நெல்லிக்காயும் அம்பாளுக்கு வைத்து குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்துடன் நெல்லிக்கனியையும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக தரவேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண கடாட்சம் நமக்கு கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு போதுமான அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:மங்களங்கள் பெருக ஐப்பசி முதல் நாள் வழிபாடு

முழு நம்பிக்கையுடன் எந்தவித சந்தேகமும் இல்லாமல் மகாலட்சுமி தாயாரை பரிபூரணமாக நம்பி இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -