- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமங்களங்கள் பெருக ஐப்பசி முதல் நாள் வழிபாடு

மங்களங்கள் பெருக ஐப்பசி முதல் நாள் வழிபாடு

- Advertisement -

ஐப்பசி மாதம் என்பது மங்களங்கள் நடைபெறும் மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான் துலாம் ராசியில் வீற்றிருக்கக் கூடிய மாதமாகவும் இந்த மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் புனித நீர் ஆடுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதம் நிறைவடைவதற்குள் தமிழ்நாட்டின் புண்ணிய நதியாக கருதப்படுகின்ற காவிரி ஆற்றில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிப்பது என்பது நம்முடைய பாவங்களை நீக்குவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த ஐப்பசி மாதத்தின் முதல் நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் மங்களங்கள் பெருகவும், வீண்விரையும் தவிர்க்கவும் உதவும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி மாதம் முழுவதும் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு இருப்போம். அந்த தெய்வ வழிபாட்டின் பலனாக ஐப்பசி மாதத்தில் நன்மைகள் நடைபெற வேண்டும் என்று நினைப்போம் அந்த நன்மைகள் நடைபெற வேண்டும் என்றால் ஐப்பசி மாதத்தின் முதல் நாளன்று நாம் சில வழிமுறைகளை பின்பற்றி தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடும் பட்சத்தில் நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறலாம். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஐப்பசி மாதம் முதல் நாள் வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து ஆரம்பிக்கிறது, அதனால் வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சேர்த்து நாம் ஐப்பசி மாதம் முதல் நாள் வழிபாட்டையும் செய்யும் பொழுது வீண்விரயம் தவிர்க்கப்படும், பணவரவு அதிகரிக்கப்படும். மகாலட்சுமியின் அருளும் சுக்ர பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். இதற்கு காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரே ஒரு நெய் தீபத்தை யாவது ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் ஐப்பசி மாதத்தின் தொடக்கத்தில் மகாலட்சுமியின் அருளை பெற உதவும் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் இரவு வரக்கூடிய சுக்கிர ஹோரயான 8 மணியில் இருந்து 9 மணிக்குள் ஒரு சிறிய பரிகாரத்தை நாம் செய்யும்பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நம் வாழ்க்கையில் நடைபெறும் என்றே கூறலாம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் தடைகள் இருப்பவர்களும், பணவரவில் தடைகள் உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு சுக்கிரனுக்குரிய தானியமான மொச்சை, சுபகாரிய தடையை நீக்கக்கூடிய மஞ்சள், இதோடு சேர்த்து மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு கூடிய 108 பொருட்களில் ஒன்றாக கருதப்படும் மருதாணி குச்சி வேண்டும்.

- Advertisement -

இரவு 8 மணியில் இருந்து 9 மணி இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை மொச்சையை பரப்ப வேண்டும். அதற்கு நடுவே ஒரு சிறிய கிண்ணம் அல்லது அகல் விளக்கை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு இன்ச் அளவிற்கு மருதாணி செடியின் குச்சியை வைக்க வேண்டும். அன்று முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்து மொச்சையை பறவைகளுக்கு தானமாக தந்து விட வேண்டும். இந்த மருதாணி குச்சியை தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். மஞ்சள் தூளை பெண்கள் தங்களுடைய முகத்திற்கு பூசிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஆண்கள் பெண்கள் என்று இருவரும் தங்களுடைய நெற்றியில் தினமும் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருளும், மகாலட்சுமி தாயாரின் அருளும், குரு பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெறும். இப்படி இவர்களின் அருள் கிடைக்கும் பொழுது வீண்விரயம் என்பது முற்றிலும் தவிர்க்கப்படும். பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்டு இருக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தடையின்றி நடைபெறும்.

இதையும் படிக்கலாமே:ஆடை இல்லாமல் குளிப்பது சரியா?
இந்த எளிமையான பரிகாரத்தையும் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் வழிபாட்டையும் முழு மனதோடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்