- Advertisement -
- Advertisement -

காசு இல்லாமல் கூட ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை நடத்தி விடலாம். ஆனால் கடன் சுமையோடு வாழ்வது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு இன்றைய தினம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு தாந்திரீக வழிபாட்டை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை.

திருவோண நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இன்று விஜயதசமி நாளாகவும் இருக்கிறது. இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த நாளில் நேர்மறை ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. எத்தனை பேருடைய வேண்டுதல், எத்தனை பேருடைய நேர்மறையான எண்ணங்கள், எத்தனை பேருடைய பிரார்த்தனைகள் எல்லாம் என்று இந்த பூமியில் நடந்திருக்கும். அந்த நேர்மறை ஆற்றலுடன் நாம் வைக்கக்கூடிய வேண்டுதலையும் நிச்சயம் கடவுள் நிறைவேற்றி வைப்பான். அதற்கு உண்டான ஒரு வழிமுறைதான் இப்போது நாம் பார்க்க போகும் இந்த பரிகாரமும்.

- Advertisement -

கடனை அடைக்க பெருமாள் பரிகாரம்

இன்று இரவு வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து விடுங்கள். உறங்க செல்வதற்கு முன்பாக கை கால் முகத்தை மட்டும் கழுவிக்கொள்ளுங்கள். தூங்க செல்வதற்கு முன்பு நம்முடைய மனது பெருசாக எந்த ஒரு வேலையை பற்றியும் சிந்திக்காது. அமைதியாக இருக்கும். அந்த நேரத்தில் கையில் 3 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

பச்சை நிறத்தில் இருக்கும் ஏலக்காய்களை பரிகாரத்திற்கு பயன்படுத்துவது சிறப்பு. பூஜை அறையில் பெருமாள் முன்பு நின்று கையில் ஏலக்காய்களை வைத்துக்கொண்டு, என்னுடைய பண கஷ்டம் எல்லாம் இன்றோடு முடிந்து விட வேண்டும். கடன் சுமை படிப்படியாக குறைய வேண்டும். நாளையிலிருந்து என்னுடைய வாழ்க்கையில் பண பிரச்சனையே வரக்கூடாது.

- Advertisement -

வாங்கிய கடனை திருப்பி அடைக்க நீ தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் மூன்று ஏலக்காய்களை பெருமாளின் பாதத்தில் வைத்து எடுத்து, ஒரு வெள்ளை காகிதத்தில் வைத்து மடித்து உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். நீங்கள் வைத்த வேண்டுதலை அந்த ஏலக்காய் தன்னகத்தை ஈர்த்திருக்கும்.

இந்த பிரார்த்தனை நிறைந்த ஏலக்காய் ஒரு நாள் இரவு முழுவதும் உங்களுடைய தலையணைக்கு அடியில் இருக்கும் போது, உங்களுடைய வேண்டுதல் நல்லபடியாக வேலை செய்யும். மறுநாள் காலை எழுந்த உடனேயே இந்த ஏலக்காயை எடுத்து பத்திரமாக ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். நீங்கள் குளித்து முடித்துவிட்டு சுத்தமாகி விட வேண்டும். பிறகு இந்த ஏலக்காயை எடுத்து இதை சர்க்கரை பச்சரிசியோடு சேர்த்த அறைத்து விட வேண்டும்.

- Advertisement -

வாசமான பச்சரிசி சர்க்கரை சேர்ந்த கலவை உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா. இதை கொண்டு போய் கோவில் மரத்தடியில் தூவி விடலாம். அரச மரத்தடியில் தூய்விடலாம், அல்லது உங்க வீட்டு பக்கத்தில் ஏதாவது மரத்தடியில் கட்டெறும்புகள் ஊரும் அல்லவா அந்த இடத்தில் தூவி விடுங்கள். இந்த கலவையை சாப்பிட்ட எறும்புகள் உங்களை வாழ்த்தும்.

இதையும் படிக்கலாமே: படிப்பு தடைபடாமல் இருக்க வழிபாடு

நீங்கள் கையில் ஏலக்காயை வைத்துக் கொண்டு வைத்த வேண்டுதலை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றி வைக்கும். இவ்வளவுதான் இந்த பரிகாரம். எளிமையான இந்த பரிகாரத்தில் முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் செய்து பாருங்கள். அடுத்த புரட்டாசி மாதம் வருவத்திற்குள், அடுத்த விஜயதசமி வருவதற்குள் இடைப்பட்ட இந்த ஒரு வருட காலத்தில் உங்கள் வாழ்க்கை டாப் லெவலில் செல்லும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by