- Advertisement -
- Advertisement -

வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாமல் இன்றளவும் நிறைய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகிறது. தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, நிம்மதியை இழந்து, இருக்கின்ற இடத்தை இழந்து, தலைமறைவாக சென்று வாழக்கூடியவர்கள் கூட இதுபோன்ற எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் உடனடியாக நல்ல பலனை பெறலாம்.

நல்ல நேரம் கை கூடி வரும்போது இது போல சின்ன சின்ன பரிகாரங்கள் கூட எதிர்பாராத சமயத்தில் நமக்கு பெரிய அளவில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். நீங்கள் கடன் சுமையால் கஷ்டப்படுபவர்களாக இருந்தால், இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். சாம்பிராணி தூபத்தோடு இந்த பொருளை கலந்து வீட்டில் புகை போட வேண்டும்.

- Advertisement -

இந்த புகை காற்றோடு காற்றாக கலந்து, கண்ணுக்குத் தெரியாமல் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை அழித்து, கண்ணுக்குத் தெரிந்த உங்கள் கடனையும் அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது. இந்த புகை போடுவதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, இந்த புகையை வீட்டில் எப்படி போடலாம் ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

கடன் தீர்க்கும் சாம்பிராணி தூபம்

சாதாரணமாக போடக்கூடிய சாம்பிராணி தூபம் எப்படி போடுவீங்களா, அதேபோல போடுங்க. கொட்டாங்குச்சியில் நெருப்புமூட்டி, வெள்ளை குங்கிலியம், சாம்பிராணி தூபம் போடவும். இதோடு ஒரு முக்கியமான பொடியை சேர்க்க வேண்டும். மாயிலை 10, வேப்ப இலை 5 கொத்து, வெற்றிலை 5, அரச இலை 10, இந்த 4 இலையையும் கொண்டு வந்து ஒரு தாம்பல தட்டில் பரப்பி நிழலிலேயே காய வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளலாம். ஒரு பொடி கிடைக்கும் அல்லவா.

- Advertisement -

அதை பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு, சாம்பிராணி தூபத்தில் இந்த பொடியை கொஞ்சம் தூவி விட வேண்டும். ரொம்பவும் இக்கட்டான கடன் பிரச்சனையில் உள்ளவர்கள் தினமும் இந்த சாம்பிராணி தூபத்தை வீட்டில் போடுங்கள். தொடர்ந்து 48 நாள் இந்த புகையின் உங்கள் வீட்டில் இருக்கணும். இந்த வாசம் உங்கள் வீட்டில் இருந்து நீங்களே கூடாது. அந்த அளவுக்கு தினமும் காலையில் அல்லது மாலையில் ஏதாவது ஒரு நேரத்தில் வீட்டில் இந்த புகையை காண்பிக்க வேண்டும். வீட்டில் பாத்ரூமை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் இந்த புகையை நீங்கள் போடலாம்.

சமையலறையில் கூட இந்த புகை கொஞ்சம் படும்படி தூபம் காட்டுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய தீராத கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டுங்கள். நிச்சயமாக பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். ஒரு புகை போடுவதன் மூலம் கடனை அடைக்க முடியுமா என்று சில பேர் சிந்திக்கலாம்.

- Advertisement -

உங்கள் கண்ணுக்கு தெரியாமல் உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் கெட்ட சக்தி தான் உங்களை பிரச்சனையில் சிக்க விடுகின்றது. அந்த கெட்ட சக்தியை அழித்து விட்டாலே போதும். உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறைய தொடங்கிவிடும். பிரச்சனைகள் குறைய தொடங்கிவிடும். தினமும் இதை செய்ய முடியாது என்பவர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமையில் இந்த புகையை வீட்டில் போடவும்.

இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரியில் படிக்க வேண்டிய பாடல்

அதுவும் முடியாது என்பவர்கள் அமாவாசை பௌர்ணமி, கிருத்திகை இப்படி வரக்கூடிய நல்ல நாட்களில் இந்த புகையை போடுவது சுபிட்சம் தரும். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -