
முப்பெரும் தேவர்களில் ஒருவராக திகழக்கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு என்று பல அற்புதமான சக்திகள் இருக்கின்றது. அடியும் முடியும் காண முடியாத அற்புத தெய்வமாக திகழக்கூடிய சிவபெருமானை வழிபடாத நபர்களே இருக்க மாட்டார்கள். சிவபெருமானை யார் ஒருவர் முழு மனதுடன் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய பிறவிப் பிணி என்பது நீங்கி மறுபிறவி அற்ற நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சிவபெருமான் கோவிலில் எந்த பொருட்களை தானமாக தருவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் மற்றும் நோய் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நம்முடைய கர்ம வினைகள் நீங்க வேண்டும் என்றால் நம்மால் இயன்ற தான தர்மங்களை செய்ய வேண்டும். அவ்வாறு தான தர்மங்களை செய்யும்பொழுது அந்த தானமாக தரக்கூடிய பொருட்கள் முழுமையாக உபயோகப்படுத்தினால் தான் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்தோம் என்றால் அதனால் அவர்கள் பலன் பெறுவார்கள். வசதியானவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் அந்த பொருட்களை உபயோகப்படுத்தவில்லை என்றால் அதை தானமாக நம்மால் கருத முடியாது. அதற்குரிய பலனும் நமக்கு கிடைக்காது.
ஆனால் இதே நாம் செய்யக்கூடிய தானதர்மமானது கோவிலுக்கு செய்யும் பொழுது அதிலிருந்து நம்மால் முழு பலனை பெற முடியும். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகளில் மிகவும் முக்கியமானதாக கருதக்கூடிய கடனும் நோயும் தீர வேண்டும் என்றால் சிவன் கோவிலில் செய்ய வேண்டிய தானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
சிவபெருமான் ஆலயத்திற்கு பல பொருட்களை நாம் வாங்கித் தரும் வழக்கம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்காக பல பொருட்களை வாங்கி தருவோம். அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதுவது தான் விபூதி. மந்திரமாவது நீறு என்று ஒரு பதிகமே இருக்கிறது. கையில் விபூதியை வைத்துக்கொண்டு அந்த பதிகத்தை மனதார சிவபெருமானை நினைத்து பாடிவிட்டு அந்த விபூதியை பூசி வந்தால் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் சிவபெருமான் தன் உடல் முழுவதும் பூசிக்கொள்ளும் ஒரு பொருளாகவும் விபூதி திகழ்கிறது. அதனால் விபூதியை நாம் சிவபெருமான் ஆலயத்திற்கு ஒரு சிறிய அளவாவது வாங்கித் தருவதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
அடுத்ததாக கர்ம வினைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கடன் பிரச்சனை. கடனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித செலவும் செய்யாமல் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை மட்டும் தானமாக கொடுத்தால் போதும் கடன் பிரச்சனை தீர்ந்து விடும். அதுதான் அரச மரக்குச்சி.
எந்த இடத்தில் அரசமரம் இருக்கிறதோ அந்த இடத்தில் தானாக கீழே விழுந்து இருக்கும் குச்சிகளை சேகரித்து அதை சிவபெருமான் கோவிலில் யாகம் செய்வதற்காக கொடுப்பதன் மூலம் கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மிகவும் சக்தி வாய்ந்த மரமாக திகழக்கூடிய இந்த மரம் ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்களுக்கும் வழிபாட்டுக்கும் உரிய மரமாக திகழ்கிறது. அதனால் இந்த மரத்திலிருந்து விழக்கூடிய குச்சிகளை நாம் சேகரித்து யாகம் நடக்கும் பொழுது கொடுப்பதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினை நீங்கும்.
இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வ சக்தி நிலையாக தங்க தூபம்
மிகவும் எளிமையான இந்த இரண்டு பொருட்களை நம்மால் இயலும் பொழுதெல்லாம் சிவபெருமான் கோவிலுக்கு வழங்குவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருந்து வந்த கர்ம வினைகளும் இனிமேல் வரக்கூடிய கர்ம வினைகளும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.