துர்நாற்றம் என்ற வார்த்தை எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் தெய்வங்கள் தங்கவில்லை என்று தான் அர்த்தம். அசைவம் செய்வதால் வரக்கூடிய வாசம் வேறு. அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. உங்களுடைய வீட்டில் அசைவம் சமைத்தால் அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இதையெல்லாம் தாண்டி வீட்டிற்குள் வரும்போது ஒரு கெட்ட வாசனையை சில சமயம் உணருவோம்.
சில வீடுகளில் சென்றால் நமக்கே தெரியும். அந்த வீட்டிற்குள் போவதற்கே நமக்கு பயமாக இருக்கும். அப்படிப்பட்ட துர்நாற்றம் வீசக்கூடிய வீட்டில் நிச்சயமாக இறை சக்தி வாழாது என்று சொல்லுவார்கள். துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு வீட்டை இறை நறுமணத்தோடு வைத்துக்கொள்ள என்ன செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோமா.
வீட்டில் தெய்வ சக்தி குடியிருக்க
முதலில் வாரத்தில் இரண்டு நாள் உங்களுடைய வீட்டில் கட்டாயம் சாம்பிராணி தூபம் போட வேண்டும். அந்த சாம்பிராணி புகையில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி போடுங்கள். கொஞ்சம் ஜவ்வாது பொடியை போட்டு இந்த புகையை வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் காண்பிக்கவும். இந்த வாசம் வீசக்கூடிய இடத்தில் இருந்து தெய்வம் வெளியேறாது.
பூஜை அறையில் எப்போதுமே மஞ்சள் தூளுடன் கொஞ்சமாக ஜவ்வாது சேர்த்து, அதில் பன்னீரை ஊற்றி சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கவும். இதே மஞ்சளை நிலை வாசலில் பூசி பொட்டு வைத்தால் இந்த மஞ்சள், ஜவ்வாது, பன்னீர் வாசம், உங்களுடைய வீட்டில் எப்போதுமே வீசிக்கொண்டிருக்கும். இது உங்களுக்கு இறையருளை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஒருவேளை உங்களுடைய வீட்டில் அசைவம் சமைத்து விட்டீர்கள். அசைவத்தை சுத்தம் செய்த பிறகு அதிலிருந்து நீச்ச வாடை அடிக்கிறது எனும் பட்சத்தில் அசைவம் சமைத்த அந்த இடத்தில் ஒரு ஊதுவத்தை பொருத்தி வைக்கவும். சமையலறையில் ஊதுவத்தி படுத்தும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். அடுப்பு பக்கத்திலோ கேஸ் சிலிண்டர் பக்கத்திலோ அந்த ஊதுவத்தையே வைக்காதீங்க.
முடிந்தால் சிங்குக்கு உள்ளவை அந்த ஊதுவத்தையே கொளுத்தி வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் வாசனை நிறைந்த ஷாம்பூ, வாசனை நிறைந்த சோப்பு எதையாவது ஊற்றி அந்த வாசனையை சரி கட்டிக் கொள்ளலாம். மற்றபடி நல்ல வாசம் உங்களுடைய வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொண்டாலே இறை சக்தியானது நிரந்தரமாக வீட்டில் தாங்கும். குறிப்பாக குலதெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: முருகனை வசியம் செய்யும் மாலை.
எப்போது பார்த்தாலும் வீட்டை குப்பை தொட்டியாக வைக்க வேண்டாம். அதாவது குழந்தைகள் இருக்கக்கூடிய இடத்தில் பொருட்கள் கலைந்து இருக்கலாம். ஆனால் தேவையற்ற பொருட்களும் அழுக்கு துணியும் தேய்க்காத எச்சில் பாத்திரம் ஒரு வீட்டுக்கு தரித்திரத்தை தேடி தரும் என்பது நம்முடைய முன்னோர்களின் கருத்து. மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றுங்கள் உங்களுடைய இல்லத்தில் இன்பமான வாசமும், குலதெய்வத்தின் சுவாசமும் வீசும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.