
ஆடி மாதம் பிறந்து விட்டது. நாளை ஆடி மாதத்தின் முதல் வெள்ளி. அம்பாள் அவதரித்த நாள் என்று சொல்லலாம். இந்த அற்புதம் வாய்ந்த, மகா சக்தி வாய்ந்த நாளில் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் அந்த அம்பாளிடமிருந்து சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றால், இந்த ஆடி மாத வெள்ளிக்கிழமையில் என்ன பரிகாரம் செய்வது, நாளை வரக்கூடிய ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் இதை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்து வரக்கூடிய மீதம் இருக்கும் நான்கு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு முன்பாக அதாவது, ஆறு மணி ஆகப்போகிறது என்றால், பத்து நிமிடம் முன்பாக இந்த பரிகாரத்தை செய்யதொடங்கி விடுங்கள். நாளை மாலை 5:50 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கினால், அப்படியே 6:00 மணிக்கு மேலே இந்த விளக்கு எரிந்தாலும் தவறு கிடையாது.
ஒரு பெரிய மண் அகல் விளக்கை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது பஞ்சகவ்ய விளக்கு. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இந்த விளக்கு கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் பெரிய மண் அகல் விளக்குக்கு, நடுவில் இந்த பஞ்சகவ்ய விளக்கை வைத்து அது நிரம்ப பசு நெய் ஊற்றி, திரி போட்டு, அந்த நெய்யில் 2 சிட்டிகை பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு விடுங்கள்.
பிறகு இந்த விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து மகாலட்சுமியிடம் உங்கள் கடன் கரைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டாலே உங்கள் குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கும். உங்கள் கணவருக்கு இருக்கும் கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. அடுத்து வழக்கம் போல உங்கள் வீட்டு பூஜை அறையிலும் விளக்குகளை ஏற்றி எப்போதும் போல வெள்ளிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த விளக்கு மெல்லமாக எறிய தொடங்கி, நெய் தீரும் வரை எறிந்த பின்பு, அந்த விளக்கு முழுவதுமே எரிந்து சாம்பல் ஆகிவிடும். அந்த அளவுக்கு விளக்கை எறிய விட வேண்டும். இந்த விளக்கை வீட்டில் ஏற்றுவது ஒரு சின்ன யாகம் வளர்த்தியதற்கு சமமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த புகை வீடு முழுவதும் பரவும் போது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படும்.
அதோடு சேர்ந்து உங்களுடைய கடனும் அழிந்து போகும் என்பது தான் இந்த பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை. எந்த வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. நாளை வரவிருக்கும் ஆடி முதல் வெள்ளிக்கிழமைக்கு சக்தி அதிகம். அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்யும் போது இரட்டிப்பு பலன் தரும்.
பசுவில் இருந்து எடுக்கப்பட்ட பால், தயிர், சாணம், நெய், கோமியம், இந்த ஐந்து பொருட்களின் கலவைதான் பஞ்சகவ்ய விளக்கு. பாலில் சந்திரன், தயிரில் வாயு பகவான், சாணத்தில் சனிபகவான், சுத்தமான நெய்யில் சூரிய பகவான், கோமியத்தில் வருண பகவான், குடியிருப்பதாக ஐதீகம். நம்முடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்ப்பதற்கு இவர்கள் அந்த பஞ்சகவ்ய விளக்கின் மூலம் நம்முடைய வீட்டிற்கு வருகை தர போகிறார்கள்.
இதையும் படிக்கலாமே: தடங்கல்களைப் போக்கும் நாகர் வழிபாடு
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை இன்றே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை மாலை தவறாமல் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நாளைய தினம், நல்ல காலம் பிறக்கும் என்ற தகவல்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.