
கடனால் பாதிக்கப்பட்டு அந்த கடனை அடைப்பதற்காக மறுபடியும் கடனை வாங்கி வட்டி கட்டி கடனிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் கடன் குறையவே இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் சுமையை நீக்க வேண்டும் என்று விரும்பும் பட்சத்தில் கடன் சுமையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதை செய்யவும் வேண்டும். அதனுடன் சேர்த்து தெய்வ வழிபாட்டை செய்யும்பொழுது கடன் சுமை என்பது குறைய ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டில் முக்கியமான வழிபாடான விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தால் கடன் ஏற்பட்டது என்பதை தெரிந்து கொண்டு அந்த கிரகத்திற்குரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஜாதகம் பார்ப்பதற்கு கூட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் விநாயகப்பெருமானை மட்டும் வழிபட்டாலே கடன் சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அப்படி விநாயகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.
நவகிரகங்களை தன்னுள்ளே வைத்திருக்கக் கூடிய தெய்வமாக திகழ் பவர் தான் விநாயகர் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் வழிபடும் பொழுது நவகிரகங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்பேற்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்பொழுது மளிகை கடையிலிருந்து தங்களால் இயன்ற அளவு கொள்ளை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும். இந்த கொள்ளை விநாயகரின் பாதத்தில் வைத்துவிட்டு விநாயகருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவரை மூன்று முறை வலம் வந்து ஒன்பது முறை தோப்புக்கரணம் போட்டு மனதார அவரிடம் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு அந்த கொள்ளை திரும்பவும் வாங்கிக்கொண்டு ஐந்து நிமிடம் கோவிலிலேயே அமர்ந்து மறுபடியும் உங்களுடைய வேண்டுதலை மனதார விநாயகரிடம் வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வர வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு இந்த கொள்ளை வேகவைத்து அருகில் இருக்கும் யாராவது ஒருவருக்கு தானமாக தர வேண்டும். கோவிலிலிருந்து வரும்பொழுதே இந்த கொள்ளை சமைக்காமல் அப்படியே கூட தானம் செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்த தானத்தை செய்து விட வேண்டும். வீட்டில் வைத்திருந்து மறுநாள் செய்வது என்பது கூடாது. இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விநாயகர் பெருமானை வழிபட்டு கொள்ளை தானமாக தருவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி கடன் சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: மருத்துவ செலவு குறைய பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த கொள்ளு பரிகாரத்தை செய்பவர்களுடைய வாழ்க்கையில் கடன் சுமை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.