- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமருத்துவ செலவு குறைய பரிகாரம்

மருத்துவ செலவு குறைய பரிகாரம்

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கூற்று பலரும் அனுபவரீதியாக உணர்ந்த உண்மை. எவ்வளவுதான் சம்பாரித்து வைத்தாலும் சம்பாதித்த பணத்தை அனுபவிப்பதற்கு உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஏழையாக இருந்தாலும் தங்களால் இயன்ற அளவு பண வரவை ஏற்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இதே உடல்நலம் பாதிக்கப்பட்டவரிடம் ஒரு கோடி பணம் இருந்தாலும் அந்த பணத்தை அவரால் அனுபவிக்க முடியாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உடல் ஆரோக்கியத்தை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தும் ஒரு சிலருக்கு அடிக்கடி மருத்துவர் ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பவர்கள் முதலில் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் தாங்கள் தங்கி இருக்கும் இல்லத்தையும், இல்லத்தை சுற்றி இருக்கக் கூடிய இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குடிக்கின்ற நீரையும், குளிக்கின்ற நீரையும், உண்ணும் உணவையும் ஆரோக்கியமான முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் பொழுதே சில வழிபாட்டு முறைகளையும் நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் பட்சத்தில் வீட்டில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குங்கிலியம், வெண்கடுகு இவற்றை போட்டு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி காட்டுவதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளோ, கிருமிகளோ அனைத்தும் விலகி ஓடும். இந்த சாம்பிராணி தூபத்தில் வேப்பிலை, மாயிலை, அருகம்புல் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் நம்முடைய உடலின் இருக்க கூடிய நோய்கள் விலகும் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் நம்மால் இயன்ற அளவிற்கு அருகில் இருக்கக்கூடிய பழங்கால சிவாலயத்திற்கு சென்று அந்த ஆலயத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். அதாவது உழவாரப் பணியில் ஈடுபட வேண்டும். எந்த அளவிற்கு நாம் பழங்கால சிவன் கோவிலை சுத்தம் செய்து புதுப்பிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடலில் இருக்கக்கூடிய தீய சக்திகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் சிவபெருமான் விலக்கி நேர்மறை ஆற்றல்களை கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக விபூதியை வாங்கி தருவதும், அபிஷேகம் செய்த விபூதியை முழு மனதோடு, நம்பிக்கையோடு நெற்றியிலும் நெஞ்சிலும் இட்டுக் கொண்டு சிவாயநம என உச்சரிப்பதன் மூலமும் நோய்களிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க ஹனுமன் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலையும், இருப்பிடத்தையும் சுத்தமாக பார்த்துக் கொண்டால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

சற்று முன்