
எல்லா அம்மன் தெய்வங்களுக்கும் சக்தி அதிகரிக்க கூடிய மாதம் என்றால் அது இந்த ஆடி மாதம் தான். வழக்கத்தை விட அம்பாள் இந்த மாதத்தில் தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. வீட்டில் இருக்கும் சக்தி சொரூபமான பெண்கள் தவறாமல் இந்த ஆடி மாதத்தில் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் தீராத பண கஷ்டம் இருக்கிறது, கடன் சுமை அதிகமாக உள்ளது எனும் பட்சத்தில் இந்த ஆடி மாதத்தில் அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும்.
ஏனென்றால் ஆடி மாத அம்மன் வழிபாடு ஆண்டியை கூட அரசனாக மாற்றிவிடும் என்ற ஒரு கருத்து உண்டு. ஆடி முதல் நாளான இன்று, இந்த விளக்கை வீட்டில் ஏற்றி அம்பாளிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் கடன் பிரச்சனை தீரும். சூழ்நிலை காரணமாக இந்த வழிபாட்டை இன்று செய்ய முடியாது என்பவர்கள், ஆடியில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமை இப்படி எந்த நாளில் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வழிபாட்டை செய்வதற்கு முன்பு வழக்கம் போல வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இது ஆடி மாதம் என்பதால் வேப்பிலைக்குத்தான் முன்னுரிமை. கட்டாயம் ஒரு கொத்து வேப்பிலையாவது கொண்டு வந்து நிலை வாசல் படியிலும் பூஜை அறையில் இருக்கும் அம்பாள் படத்திலும் வையுங்கள்.
ஆடி மாதம் முழுவதும் இந்த வேப்ப இலை உங்கள் பூஜை அறையிலேயே இருக்கட்டும். 3 நாட்களுக்கு ஒரு முறையோ, 4 நாட்களுக்கு ஒரு முறையோ பழைய வேப்ப இலைகளை எடுத்து போட்டுவிட்டு மீண்டும் புதிய வேப்ப இலைகளை வைக்கலாம். வேப்பிலை எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒரு இலை தான்.
இன்று மாலை நிலைவாசல் படியை சுத்தமாக துடைத்து அழகாக கோலம் போட்டுக் கொள்ளுங்கள். மஞ்சளும் குங்குமமும் நிலை வாசலில் நிறைவாக இருக்க வேண்டும். இதை பார்க்கும் போதே அம்பாள் உங்கள் வீட்டிற்குள் குடி வர வேண்டும். அந்த அளவுக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு தாம்பூல தட்டு வைத்து, அதன் மேலே கொஞ்சம் வேப்ப இலைகளை உருவி போட்டு விடுங்கள்.
அந்த வேப்ப இலைகளுக்கு நடுவில் புதுசாக வாங்கிய ஒரு மண் அகல் விளக்கை வைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி, சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய திரியை இந்த விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
சிவப்பு நிறத்தில் கடைகளில் விளக்கு திரி விற்கிறது. அதையே வாங்கி இந்த தீபத்தில் போட்டு விளக்கு ஏற்றலாம். இந்த விளக்கை ஏற்றிவிட்டு இந்த விளக்கிற்கு முன்பாக அமர்ந்து கொஞ்ச நேரம் அந்த அம்பாளை பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள். ‘ஓம் சக்தி துணை! ஓம் பராசக்தி துணை!’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
அம்பாளின் துணையால் என் அத்தனை கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள். அந்த சக்தி தேவி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் துணையாக வந்து நின்று, உங்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொள்வாள். சிவப்பு நிறம் என்பது கஷ்டத்தை போக்கக்கூடிய, கடனை நீக்கக்கூடிய நிறம் என்பதால், அந்த சிவப்பு நிற திரியில் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலமாகத்தான் முழு பலனையும் அடைய முடியும்.
ஆடி மாதம் நிறைவடைவதற்குள் ஏதாவது ஒரு நாள் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்தால், நிச்சயம் உங்களால் நல்ல பலனை பெற முடியும். எங்களால் வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்ற முடியும் என்பவர்கள் தாராளமாக வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: அபசகுணங்கள் நீங்க பரிகாரம்
இந்த ஆடியில் எவ்வளவுக்கு எவ்வளவு வேப்பிலையின் மேல் தீபம் ஏற்றி வைத்து அம்பாள் வழிபாடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக சீக்கிரம் குறைய தொடங்கி விடும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறையை பின்பற்றுங்கள் கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.