- Advertisement -

கடன்களை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

அஷ்டமி திதி என்பது காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக திகழ்கிறது. கால பைரவர் தான் இந்த உலகத்தை காக்கக்கூடிய தெய்வமாகவும் சிவா அம்சமாகவும் திகழக்கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்மையும் காத்து நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியாக வாழ வைப்பார். அப்படிப்பட்ட காலபைரவருக்குரிய அஷ்டமி திதியில் அவரை நினைத்து நாம் செய்யக்கூடிய இந்த ஒரு எளிமையான பரிகாரம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகளை தீர்க்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கால பைரவரை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்தவித கிரக தோஷமும் அணுகாது, மேலும் எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் எதுவுமே நேராது, துர் மரணங்கள் நிகழாது, தீய சக்திகள் அண்டாது என்று கூறிக் கொண்டே செல்லலாம் அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கால பைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக அஷ்டமி திதியும் உகந்த கிழமையாக ஞாயிற்றுக்கிழமையும் திகழ்கிறது. இந்த இரண்டும் ஒரு சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாகதான் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திகழ்கிறது. இந்த நாளை தவறவிடாமல் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனைத் தரும்.

- Advertisement -

செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 16 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி மறுநாள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காலை 7:01 மணி வரை இருக்கிறது. பொதுவாக காலபைரவரை ராகு காலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் என்பது மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் வரும். இந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய காலபைரவரின் அபிஷேகத்திலும் வழிபாட்டிலும் கலந்து கொள்வது கூடுதல் பலனைத் தரும். அதே நேரத்தில் வீட்டில் நம் ஒரு எளிமையான பரிகாரத்தையும் செய்யலாம்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய வெற்றிலை, 8 மிளகு, ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். பலரது இல்லங்களில் காலபைரவரின் படம் என்பது இருக்காது. அதனால் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வாசனை மிகுந்த சாம்பிராணி ஊதுபத்தியை பொருத்தி வைத்து இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டின் மேல் பன்னீரில் சுத்தம் செய்த வெற்றிலையை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். நாணயத்தையும் பன்னீரால் சுத்தம் செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக எட்டு மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மிளகாக வெற்றிலையில் வைக்கும் பொழுது காலபைரவரை மனதார நினைத்து “ஓம் கால பைரவரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்த பிறகு காலபைரவரிடம் முழுமனதோடு வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். தீபம் குறைந்தது 45 நிமிடமாவது எரிய வேண்டும். அதுவரை இந்த வெற்றிலையும் மிளகும் அப்படியே இருக்கட்டும்.

தீபத்தை குளிர வைத்துவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை சிவபெருமானின் படத்திற்கு முன்பாகவே வைத்துவிட்டு வெற்றிலையில் இருக்கக்கூடிய மிளகை மட்டும் எடுத்து மூட்டையாக மடித்து, வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றாக அமர வைத்து திருஷ்டி சுத்துவது போல் வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். பிறகு தங்களுக்கு தாங்களே வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றி அருகில் இருக்கக்கூடிய நீர்நிலைகளில் போட்டு விட வேண்டும். அருகில் நீர் நிலைகள் இல்லை என்னும் பட்சத்தில் கால்படாத ஏதாவது ஒரு இடத்தில் அதை போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்குள் வரும் பொழுது முகம் கை கால்களை கழுவி விட்டு வரவேண்டும் இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களாக இருந்தாலும் சரி கடன்களாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் நம்மை விட்டு நீங்கும். ஒரு ரூபாய் நாணயத்தை அடுத்த முறை சிவாலயத்திற்கு செல்லும் பொழுது உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களையும் தரும் மகாலட்சுமி பூஜை

கால பைரவருக்குரிய அஷ்டமி திதியில் கால பைரவரை நினைத்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்பவர்களுக்கு கடன் பிரச்சினைகளும் கஷ்டங்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -