
முருகப்பெருமானின் வழிபாடு செய்ய பல தினங்கள் இருந்தாலும் இந்த சஷ்டி ரீதியானது மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. சஷ்டி திதியிலே பெரிய சஷ்டி எனப்படுவது ஆறு நாட்கள் கடும் விரதம் இருந்து எடுப்பது. அது தவிர மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி என இரண்டு சஷ்டி தினங்கள் வரும். இந்த நாட்களிலும் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.
அதிலும் நாளைய தினம் தேய்பிறை சஷ்டி திதியில் முருகப்பெருமானை வணங்கினால் நம்முடைய கடன் கஷ்டங்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சஷ்டி திதியானது இன்றைய தினம் மூன்று மணிக்கு துவங்கி நாளை 29.5. 2024 புதன்கிழமை மதியம் 1.45 மணியுடன் முடிவடைந்து விடுகிறது. ஆகையால் இந்த வழிபாட்டை நாளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது மிகவும் சிறந்தது. இதை செய்ய இயலாதவர்கள் மதியத்திற்குள்ளாக செய்து விடுங்கள்.
இந்த வழிபாடு செய்ய உங்கள் வீட்டில் இருக்கும் முருகர் படத்தை நன்றாக துடைத்து சந்தன குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். நாளை கண்டிப்பான முறையில் செவ்வரளி மாலையை சூட்டுங்கள் இது முருகருக்கு மிகவும் உகந்தது. எளிமையான நெய்வேத்தியம் ஒன்றை செய்து வைத்து விடுங்கள். இப்போது நாம் முருகருக்கு தீபம் ஏற்ற வேண்டும் அதுதான் முக்கியம்.
பொதுவாக முருகருக்கு தீபம் என்றால் நாம் வெற்றிலை தீபம் தான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இந்த கடன் தீர ஏற்றக் கூடிய தீபமுறையானது நெல்லிக்கனியை கொண்டு ஏற்ற வேண்டும். நெல்லிக்கனியை கொண்டு மகாலட்சுமி தாயாரை வணங்குவது அனைவருக்கும் தெரியும் ஆனால் முருகப்பெருமானுக்கும் சஷ்டி திதியில் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்ததாக சொல்லப்படுகிறது.
இரண்டு நெல்லிக்கனியை எடுத்து அதை தீபம் ஏற்றதற்கு தகுந்தவாறு நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஏற்ற வேண்டும். இந்த தீபம் சிறிது நேரம் நம் பூஜை அறையில் எறிந்தாலும் கூட போதும். மிகப் பெரிய யோகத்தை கொடுக்கும். இந்த தீபத்தை ஏற்றிவிட்டு கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் இப்படி முருகருக்கு உகந்த ஏதேனும் ஒரு கவசத்தையோ பாடலையும் படிக்கலாம் கேட்கலாம்.
அதன் பிறகு தீபாரதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இதற்குள்ளாகவே நெல்லிக்காய் தீபம் குளிர்ந்து விட்டாலும் அதற்காக வருத்தப்பட வேண்டாம். இந்த ஒரு தீபமானது உங்களின் தீராத கடன் பிரச்சனையை தீர்ப்பதுடன் மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகத்தையும் பெற்று செல்வ வளத்தையும் அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலக தீப பரிகாரம்
அதுவும் நாளைய தினம் இது செய்யும் பொழுது இன்னும் அதிக பலனை தரும். இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் முருகனை வழிபட்டு இந்த தீபம் ஏற்றி கடன் என்னும் துன்பத்திலிருந்து வெளிவரக் கூடிய வழியை தேடிக் கொள்ளலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.