- Advertisement -
- Advertisement -

ஐப்பசி மாதம் வரக்கூடிய ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு நாளும் விசேஷமானது தான். இந்த ஐப்பசி மாதம் தீபாவளி மாதம், குபேரனுக்கு உரிய மாதம், சிவபெருமானுக்கு உரிய மாதம், இந்த மாதத்தில் எந்த அளவுக்கு வழிபாட்டை நம்பிக்கையோடு செய்கின்றோமோ, அந்த அளவுக்கு நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையில் இன்றைய தினம் வந்திருக்கக் கூடிய பஞ்சமி திதியில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வாராகி வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடன் தீர்க்கும் வாராகி மந்திரம்

வாராஹி வழிபாடு என்பது நம்பிக்கையில் செய்ய வேண்டிய வழிபாடு. பக்கத்து வீட்டுக்காரங்க வாராஹி வழிபாடு செய்றாங்க, அவங்க நல்லா இருக்காங்க. யூட்யூபில் வீடியோ போட்ரவங்க வாராஹி வழிபாடு செய்றாங்க. அவங்களுடைய கஷ்டங்கள் தீந்துச்சு‌. அவங்களுக்கு நிறைய பணம் வந்துச்சு அப்படி என்று எல்லாம் நாம் வாராகியை வழிபாடு செய்ய துவங்க கூடாது.

- Advertisement -

நம்முடைய ஆழ் மனதில் தோன்ற வேண்டும். வராகியை கும்பிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கே உதிக்க வேண்டும். வேறு ஏதாவது கோவிலுக்கு சென்று, வேறு ஏதோ இறைவனை வழிபாடு வழிபாடு செய்வீர்கள். உதாரணத்திற்கு முருகர் கோவில் பெருமாள் கோவில் சிவன் கோவில் என்று போறீங்க. எதர்ச்சியாக உங்களுக்கு வாராகியின் உருவம் கண்ணில் தெரியலாம், வாராஹி திருவுருவப்படம் தெரியலாம்.

இந்த வாராஹி நம் வீட்டிற்கு வந்தால் நல்லது என தோன்றும். அல்லது வாராஹி தாயே ஏதாவது ரூபத்தில் நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லுவாள். இப்படி உங்களுக்கே அந்த வாராஹி வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தால் மட்டும் வாராகி வழிபாட்டை தொடரவும். அதாவது வாராகியை யார் வேண்டுமென்றாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் மனதார நினைத்து வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அதில் தவறு கிடையாது. வீட்டிற்கு சிலையாக, திரு உருவப் படமாகவோ வாங்கி வர வேண்டும் என்றால், அந்த வழிபாட்டை ஓரிரு நாள் செய்து விட்டு, இடையில் நிறுத்தக்கூடாது. அந்த அளவுக்கு உங்களுக்கு வழிபாடு செய்ய நேரம் இருக்கிறது, அவளை வாழ்நாள் முழுவதும் வீட்டில் வைத்து அவளுக்கு வழிபாட்டை மேற்கொள்ள முடியும் அவளுக்கு நெய்வேத்தியம் வைக்க முடியும்.

அந்த அளவுக்கு உங்களுக்கு வழிபாடு செய்வதற்கான பக்தி இருக்கிறது, உங்களுடைய வாழ்வு சூழ்நிலை நிதிநிலைமை, குடும்ப சூழ்நிலை எல்லாம் சரியாக இருக்கிறது, எனும் பட்சத்தில் வாராகியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள். இல்லை என்றால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி தீபச்சுடரில் வாராஹித்தாயே நினைத்து வாராஹித்தாயை வழிபாடு செய்து கொள்ளலாம். தவறே கிடையாது.

- Advertisement -

வாராகியை ஏற்கனவே நீங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்களாக ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் விருப்பப்படி வாராகி வழிபாடு செய்துவிட்டு அந்த அம்பாளின் முன்பு கடன் தீர வேண்டும் என்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள். எங்களுடைய வீட்டில் வாராஹி வழிபாடு நாங்க செய்ய மாட்டோம் என்ன செய்வது. இன்று மாலை 6:30 மணிக்கு மேல் பூஜை அறையில் ‘வாராஹி தாயே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி விளக்கு ஏற்றுங்கள்.

இந்த விளக்கில் தீபச்சுடராக நீ எனக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்து ‘ஓம் ருண நாசின்யை நமஹ !’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள் போதும். வேறு எதுவுமே தேவை கிடையாது. உங்களுடைய பண கஷ்டத்தை தீர்ப்பதற்கு அந்த வாராஹித்தாய் ஓடி வந்து விடுவாள்.

உண்மையான பக்தியோடு வராகியின் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று எவர் ஒருவர் இந்த மந்திரத்தை இன்று மாலை உச்சரிக்கிறார்களோ, அவர்களுடைய வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நிச்சயம் தீரும். கடன் சுமை படிப்படியாக குறையும். என்னால் இந்த கடனை வாங்கிவிட்டு திருப்பித் தரவே முடியவில்லை.

இதையும் படிக்கலாமே: நடக்காத காரியத்தை நடத்தி காட்டும் பஞ்சமி வழிபாடு

பேசாமல் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறது, என்று துக்கத்தின் உச்சகட்டத்தில் இருப்பவர்களுக்கு கூட வாழ்க்கை ஓஹோ என மாறும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாடுதான் இது. நீயே கதி என்று வாராகி நினைத்து மந்திரத்தை சொல்லி பாருங்கள். மந்திரம் நிச்சயம் உங்களுக்கு வேலை செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -