- Advertisement -

கடனில் இருந்து விடுபட்டு செல்வதை சேர்க்க துவங்க வேண்டுமா? இதை செய்தால் போதும். செல்வம் தானாக வந்து சேரும்.

கடன் என்பது அனைவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த கடன் சுமையிலிருந்து வெளியில் வருவதற்கு கடுமையாக முயற்சி எடுத்தும், பலரால் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். செல்வத்திற்கு அதிபதியான வெங்கடாஜலபதியே குபேரிடம் கடன் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கடன் சுமையிலிருந்து வெளியில் வருவதற்கும், கடன் தீரவும் ஒரு சில எளிய பரிகாரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

கடன் பிரச்சனை தீர பரிகாரம் | kadan prachanai theera pariharam in Tamil
கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் பலர் இருக்கிறார்கள். அதே போல் வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாமலும் பலர் இருக்கிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த கிழமையாக கருதப்படுகிறது. ஆம், செவ்வாய்க்கிழமைகளில் நாம் பெற்ற கடனில் ஒரு சிறு தொகையை திருப்பி தருவதன் மூலம் நம்முடைய கடன் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நாம் பெற்ற கடன் தொகையில் வட்டியை செலுத்தும் போது இந்த செவ்வாய்க்கிழமைகளில் செலுத்தினாலும் கடன் தீரும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமையை தவிர்த்து மற்ற கிழமைகளில் நாம் தொகையை திரும்ப தரவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது செவ்வாயின் கிரக ஓரை நடக்கும் நேரத்தில் நாம் திருப்பித் தந்தாலும் கடன் சுமை குறையும். இந்த கிரக ஓரை நம் வீட்டு காலண்டரில் பின்புறமாக இருக்கும்.

Oorai in Tamil

எந்த நேரத்தில் செவ்வாய் கிரக ஓரை இருக்கிறது என்று பார்த்து வட்டியையோ அல்லது அசலில் சிறு தொகையையோ செலுத்தலாம். புதிதாக கடன் வாங்கும் போதும் செவ்வாய்க்கிழமைகளில் வாங்கினால் அந்த கடனை நாம் விரைவில் திரும்ப தந்து விடுவோம். இது மட்டும் இல்லாமல் குளிகை நேரத்தில் நாம் கடன் வாங்கவே கூடாது.

- Advertisement -

குளிகை நேரத்தில் நாம் என்ன செய்கிறோமோ அதையே பன்மடங்கு செய்வோம் என்ற கூற்று நிலவுகிறது. ஆதலால் நாம் குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் திரும்பவும் பல மடங்கு அதிகமாக கடன் வாங்குவோம் என்பதால் குளிகை நேரத்தில் கடன் வாங்க கூடாது. ஆனால் அதே குளிகை நேரத்தில் நாம் கடனை திரும்ப அடைக்கலாம். அவ்வாறு அடைக்கும் போது நாம் பெற்ற கடன்கள் அனைத்தையும் விரைவில் அடைத்து விடுவோம்.

இந்த குளிகை நேரத்தில் புதிதாக நகைகள், வீடு, வாகனம், துணிகள் போன்றவற்றை வாங்கலாம். அவ்வாறு வாங்கும் போது அது நமக்கு பல மடங்கு வந்து சேரும். ஆதலால் நமக்கு அதிகமாக எது வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதை நாம் குளிகை நேரத்தில் செய்யலாம். எது வேண்டாம் என்று நினைக்கின்றோமோ அதை குளிகை நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

மேலும் செவ்வாய்க்கிழமைக்கு உகந்த தெய்வமான முருகனுக்கு விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் சுமைகள் தீரும். அதற்கு நாம் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று செவ்வரளி பூவை முருகனுக்கு கொடுத்து விட்டு ஆறு நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபடலாம் அவ்வாறு வழிப்படும் நேரம் செவ்வாய் கிரகத்திற்குரிய கிரக ஓரை நேரமாக இருந்தால் மிகவும் சிறப்பானது.

இவ்வாறு தொடர்ந்து நாம் ஆறு வாரங்கள் முருகனுக்கு விளக்கேற்றினால் கடன் தீர்வதோடு மட்டும் அல்லாமல் செல்வமும் பெருகும். இந்த கடன் சுமையை தீர்க்கும் மற்றொரு தெய்வமாக கருதப்படுபவர் காலபைரவர். தேய்பிறை அஷ்டமி நாட்களில் நாம் கால பைரவருக்கு விளக்கேற்றி வரும் போது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்பிறையாக தேய்ந்து மறைந்துவிடும். ஆதலால் தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து வருவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சனைகள் தீரும். மேற்கூறிய எளிய பரிகாரங்களை செய்து கடன் சுமையிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -